பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைக்கதைகளும் இதிகாசங்களும் புராணங்களும் 41 பெயரின் இறுதிச் சொல்லாக‘லெட்சுமி'யைச் சேர்த்துக் கொள்ளுவர்.* வீடுகட்டிப் புதுமனை புகும்போது லெட்சுமி என்ற பெயருடைய ஒரு பெண்ணை அழைப்பது மரபு. வீடு லெட்சுமி கடாட்சம் நிறைந் திருக்கவேண்டும் என்ற ஆசையால் இவ்வாறு செய்வது வழக்கம். ஒரு புதுமனை புகுவிழா. வீட்டுக்கார அம்மையார், 'லெட்சுமி' என்ற வேலைக்காரப் பெண்ணை அந்த நாளில் வீட்டுக்கு வரச்சொல்லி யிருந்தார். லெட்மி அன்று எதிர்பாராத விதமாகப் பாட்டியினுடைய ஊருக்குச் சொல்லவேண்டியதாயிற்று. அவள் தன் தங்கையை அனுப்பியிருந்தாள். வீட்டுக்கார அம்மையார், 'லெட்சுமி உள்ளே வா என்று ஆவலோடு "லெட்சுமி போய் . அழைத்தாள். விட்டது! நான் அவள் தங்கை” என்று வந்தவள் சொன்னாள். புது மனை புகும் நாளில் "லெட்சுமி போய்விட்டது " என்ற சொற்கள் காதில் விழுந்தால் யார்தான் வருத்தப்படமாட்டார்கள் ? அந்த வீடு ராசி இல்லாதது என்று எண்ணம் பரவிவிட்டது.

  • சீதாலெட்சுமி, மகாலெட்சுமி, முத்துலெட்சுமி, சொர்ணலெட்சுமி முதலியன.