பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இந்த இரண்டாம் குறிப்புப்படி தமிழ் அறிஞர் இசைதல்-அவர்களது விட்டுக் கொடுக்கும் பெருங் தன்மையையும் தம் இனத்தவராகிய தெலுங்கரிடம் கொண்டுள்ள உடன் பிறப்புப் பற்றையும், என்றும் கிலை யுள்ள அமைதியை அவாவும் அருங்குணத்தையும் காட்டும் அறிகுறியாக எல்லறிஞரால் நன்கு மதிக்கப்படும்.

திருவேங்கடமும் திருக்காளத்தியும்

பல நூற்றாண்டுகளாகத் தமிழர் தம் உயிரினும் மேலாகக் கருதிப் போற்றி வந்த - போற்றி வருகின்ற திருவேங்கடத்தையும் திருக்காளத்தியையும் தமிழர் பிறர் கையில் விடுதல் தம்முயிரை விட்டுவிடுதல் போலாகும். சங்கத் தமிழ்ப் புலவர்களால் வட எல்லை எனப் பாராட் டப்பட்டு ஆழ்வார்களால் எத்தெடுக்கப் பெற்ற வேங் கடமும், சைவசமயப் பெரியாராகிய திருக் கண்ணப்பர், திருநாவுக்காசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்களால் போற்றப்பட்ட திருக்காளத்தியும் தமிழகத்தின் இரண்டு கண்கள் ஆகும்; வைணவ - சைவ சமயங்களின் உயிர் கிலை ஆகும். இவற்றைப் பெற முயல்வதே தமிழர் கடமையாகும். இந்த ஈரிடங்களையும் தன்னகத்தே பெறும் தமிழ் மாகாணத்தைத் தமிழ் மக்கட்கு அருளு மாறு வேங்கடத்தில் கின்ற திருக் கோலத்தில் உள்ள கெடியோனேயும் மாகமார் திருக்காளத்தி மலையெழு கொழுந்தாய் உள்ள எக நாயகனை ‘யும் இறைஞ்சுகின் ருேம்.

سادگ/چسپی۔۔۔

. . . * * திருமவல . திருப்பதி தேவஸ்தானம் ‘ என்னும் வழக்கு இன்றும் இருந்துவருதல் காண்க.