பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

பல்லவர் காலக் கல் வெட்டுகளும் ஐயமற உறுதிப்படுத் தல் காண்க.

நாயன்மாரும் காளத்தியும்

தமிழகத்தின் வட எல்லை ஆகிய வேங்கடம் ஆழ்வார் பாராட்டுக்கு உரிமையானவாறே - அதே காலத்தில் (பல்லவர் காலத்தில்) வாழ்ந்த திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் என்ற சைவசமய குரவர் மூவரும் திருக் காளத்தியைத் தமிழக வடகோடியில் உள்ள சிவத்தல மாகக் கருதினர். அவர்கள் அங்கு இருந்தபடியே கர்நாக் ஜில்லாவில் உள்ள திருப்பருப்பதம் முதலிய வடநாட்டுத் தலங்களை ப்பற்றிப் பதிகம் பாடியுள்ளார். திருநாவுக்கா rif ஒருவரே வடநாடு சென்று மீண்டவர். இகளுல்ى : தொண்டை நாட்டு வடகோடியில் உள்ள சிவத்தலமாக அக்காலத்தில் காளத்தி கருதப்பட்டது என்பது அறிய லாகும், திருநாவுக்கரசர் தொண்டை காட்டுத் தலங் களைத் தரிசித்துக்கொண்டு திருப்பாசூர் பண்ரிந்து அங் கிருந்து பல்பதியும் நெடுங்கிரியும் காடுகளும் கடந்து திருக்காரிகரை * சென்று தரிசித்தார்; பின்னர் அங் கிருந்து புறப்பட்டுச் சென்று திருக்காளத்தியை அடைந் தார்; மாசுமார் திருக்காளத்தி மலையினைக் கண்டு மட் டற்ற மகிழ்ச்சி கொண்டார் ; விழுந்து பணிந்தார் ; நாள் ஆறில் கண்ணிடந்து அப்பிய கண்ணப்பர் வழிபட்ட காளத்தி ஈசனைக் கண்களாக் கண்டு ஆனந்தக் கண்ணிர் பெருகப் பாடினர் ; பரவினா” என்னும் செய்திகளை வல்

  • இக்காலத்தில் ‘இராமகிரி’ எனப்படுகிறது. சங்ககாலக் ‘காரியாறு இன்று காலேறு என்று தெலுங்கப் பெயருடன் troops.--Dr. S. K. Aiyangar's ‘Manimekalai in its Historical Setting, pp. 45-46. *