பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

என்று குறிக்கப்பட்டுள்ளது. திருவேங்கடம் உட்பட்ட தொண்டை நாட்டின் வட பகுதி வடகாஞ்சி மண்டலம்’ என்று இப்பாண்டியன் காலத்தில் வழங்கி வந்தது.” திருமலை அடிவாரத்தில் கபில தீர்த்தத்தண்டை உள்ள நம்மாழ்வார் கோ வி ல் அக்காலத்தேதான் கட்டப் பட்டது.”

பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்ட யாதவராயர் கல் வெட்டுகளும் தமிழில் உள்ளன. அவற்றுட் காணப்படும் இடப் பெயர்கள் முதலியன தமிழ்ப் பெயர்களே : பொங் களுர், இல்லத்தூர் நாடு, திருத்தாயார் காணிக்கை, திருரு கர்ை காணிக்கை, திருவேங்கட முடையான் (பெருமாள் பெயர்).4 ஹோய்சளர் காலம்

கி. பி. 14-ஆம் நூற்றுண்டின் முற்பாதியில் மாலிக் காபூர் படை யெடுப்பு ஏற்பட்டது. அதனுல் விக்தமலைக் குத் தெற்கே இருந்த தேவகிரி நாட்டையாண்ட யாதவர், வாரங்கல் நாட்டை ஆண்ட காகதீயர், தேவகிரி நாட்டை யாண்ட ஹொய்சளர் என்பவர் தம்மரசு இழந்தனர் ;. பாண்டியர் பதவி இழந்தனர். தென்னுடு முழுவதும் குழப்பமுற்றது. ஹொய்சள அரசன் மூன்ழும் வல்லாள மகாராஜன் திருவண்ணுமலையைத் தலைநகராகக் கொண்டு. தொண்டை நாட்டையும் சேர்த்து ஆளலாயினன். வட தொண்டை நாட்டை அவன் பிரதிகிதியாகச் சிங்கய்ய தண்ட நாயகன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் திருமலையிற் செய்க திருப்பணிகள் சில. அவன் பெயர்

சில கல்வெட்டுகளில் காண்கின்றன. அக்கல்வெட்டுக்

1. Tirumalai Ins. Vol. I. 43. 2. Ibid. No. 50. 3. Ibid. 57, 58. 4. Ibid. Nos. 99-110,