பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

“பண்டார வாடை கிராமங்கள் என்று பெயரிடப் பட்டன.” -

7. துய்யா காட்டுப் புல்லாலப் பட்டு வேளாளர் அறம் செய்தனர். திருச்சானூர்ச் சபை உறுப்பினர் ஒருவாது பெயர் விலைகடந்த தாசர் அண்ணு ஐயங்கார் மகனை பூரீ இராமையன் என்பது. கிருஷ்ணதேவராயர் காலத் திலும் திருவாய்மொழி முதலிய தமிழ்ப் பிரபந்தங்கள் தொடர்ந்து ஒதப்பட்டு வந்தன.”

கிருஷ்ணதேவ ராயர் திருக்காளத்தி காதரைத் தரி சித்து அவருக்கு மானியமாக விட்ட சற்றுப்புற கிராமங் கள் - போனகை நாட்டுப் புலியூர், கமலை நாட்டுத் தென் பாக்கம், கரும்பேடு, சாத்தம் பையூர், மாடகல்லூர்ச் சீமை யைச் சேர்ந்த தும்மூர் என்பன. இம்மூர்’ என்பது பண்டைக் காலத்தில் ‘தும்பையூர்’ எனப்பட்டது. அங் குள்ள கோவிற் பெருமாள் பெயர் கருமாணிக்கப் பெருமாள் எனப்பட்டது. அக்கோவிலில் நம்பிமார் மூவர் இருந்து பூசை செய்தனர். 1 அச்சுதராயர் காலம் (கி. பி. 1580-1542)

இவர் காலத்திலும் திருமலையிலும் திருப்பதி யிலும் இருந்த மடங்கள், நந்தவனங்கள், கோவில்கள் யாவும் முன் போலவே தமிழர் ஆதிக்கத்திற்றான் இருந்தன என்பதை எண்ணிறந்த கல்வெட்டுகள் புலப்படுத்து கின்றன. கில அளவைப் பெயர், நாணயங்களின் பெயர்

“பண்டார வாடை என்று தஞ்சாவூருக்கு அருகில் ஒர் ஊர் உள்ளது. அதுவும் இவ்வாறு தேவதான ஊராக இருந்து இப்பெயர் பெற்றது போலும் !

6, 142. 7, 167, 172, 178.

† Nellore Ins. Vol. 111, Tummur Ins. 11, 12, 17.