பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3

பியர் காலத்தவர். அவர் தாம் செய்த யாப்பிலக்கண நூலில் தமிழக எல்லைகளைக் குறித்துள்ளார். அச்செய்யுளில்,

“வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும்
வேங்கடம் குமரி தீம்புனம் பெளவமென்(று)
இந்நான் கெல்லை அகவயிற் கிடந்த
நூலதின் உண்மை வாவிதின் விரிப்பின்...”

என்னும் அடிகளை நோக்குக,அங்கும் வேங்கடமே வட எல்லையாகக் குறிக்கப்பட்டமை காண்க.

குமரியாறு தென் எல்லையாக இருந்த காலத்தவரான சிகண்டியார் என்ற இசைநூற் புலவர்,

வேங்கடம் குமரித் தீம்புனல் பெளவமென் றிங்கான் கெல்லை தமிழது வழக்கே

என்று குறித்தனர். இதனால் இயற்றமிழ் வழக்கிற்கு ஒப்ப இசைத்தமிழ் வழக்கினும் இவ்வெல்லைகளே குறிக்கப்பட்டமை காண்க.

சிறு காக்கைபாடினியம்

இஃதொரு யாப்பிலக்கண நூல். இதனைச் செய்தவர் பெண்பாற் புலவர். அவர் தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டவர் ; குமரியாறு கடல் கொள்ளப்பட்டபின் நூல் பாடியவர் ; அதனால் தமது நூலில் தமிழகத்துத் தென் எல்லை கூறும் பொழுது குமரியாற்றைக் கூறாது கடலை எல்லையாகக் கூறுகிறார். -

“வடதிசை மருங்கில் வடுகு வரம்பாகத்
தென்திசை உள்ளிட் டெஞ்சிய மூன்றும்...கடல்”[1]

என்று கூறியுள்ளதைக் காண்க. இங்கு வட எல்லை


  1. தொல்காப்பியம், செய்யுளியல், சூ. 1.உரை.