பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII. தமிழர் கடமை

இதுகாறும் கண்ட உண்மைகள்

சங்ககால முதல் வெள்ளையர் ஆட்சி ஏறபடும்வரை வேங்கடமே (திருப்பதியே) தமிழகத்தின் வட எல்லையாக இருந்தது - தொண்டை நாடு வேங்கடம், காளத்தி, கூர்ே இவற்றைத் தன் அகத்தே பெற்றிருந்தது - தொண்டை நாடு சங்ககால முதல் வெள்ளையர் ஆட்சிவரை தமிழ் நாடாகவே இருந்துவந்தது என்பதை இலக்கியம், வர லாறு, கல்வெட்டு இவற்றைக் கொண்டு அறியலாம் - தொண்டை நாட்டின் 24 கோட்டங்களும் அவற்றில் அடங்கிய ஊர்களும் தமிழ்ப் பெயர்களாகவே இருந்தன - விஜயநகர ஆட்சிக் காலத்தில் சில ஊர்ப்பெயர்கள் புதிய பெயர்களைப் பெற்றன (ஆட்சி மா. பாட்டால் ஊர்ப் பெயர்கள் மாறுதல் அடைதல் யாண்டும் வழக்கமே ஆகும்) - விஜயநகர ஆட்சியின்போது தெலுங்கு வட தொண்டை நாட்டில் ஒரளவு பரவத் தொடங்கியது. தெலுங்கர் வடதொண்டை நாட்டில் குடியேறி நிலைக்க லாயினர். ஆதலின் தெலுங்கக் கல்வெட்டுகள் சில வட தொண்டை நாட்டில் காணப்படுகின்றன-என்பனபோன்ற பல உண்மைகள் முன்சொன்ன பகுதிகளிலிருந்து எளி தில் அறியத் தக்கவையாகும். வட எல்லேயில் மாற்றம்

வட பெண்ணையாறு முதலில் தமிழகத்தின் வட எல்லையாக இருந்தது - பின், வேங்கடம் - காளத்தி என் பன வட எல்லே இடங்களாகக் குறிக்கப்பட்டன. தெல் இார் ஜில்லாவின் தென்பகுதி-பையூர் இளங் கோட்டமாக