பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழ் நூல் தொகுப்புக் கலை 3,770 ஆண்டும், கடைச்சங்கம்1,850 ஆண்டும் நடைபெற்றன வாம்.ஆக மூன்று சங்கங்களும் நடைபெற்ற மொத்த ஆண்டுகள் 9,990 ஆகும். கடைச்சங்கம் ஏறக்குறைய கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு 1,800ஆண்டுக்காலம் கடந்துபோக, இப்போது இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருக்கிறோம் நாம், இந்தக் கணக்கின்படி நோக்கின், இற்றைக்கு (1804 1,800=) 3,650 ஆண்டுக்குமுன் கடைச்சங்கமும், இற்றைக்கு (3,650+3,700=) 7.350 ஆண்டுக்கு முன் இடைச்சங்கமும், இற்றைக்கு (7,350+4,440=) 1,1790 ஆண்டுக்கு முன் தலைச் சங்கமும் தோன்றியிருக்க வேண்டும். இம் மூன்று சங்கங்களுக்கும் நடுவே சில் பல ஆண்டுகாலம் இடைவெளி இருந்திருப்பின் இச் சங்கங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஆண்டுகளுக்கு இன்னும் முன்னமேயே தோன்றியதாகக் கணக்கிட்டுக் கொள்ள iேண்டும். எனவே, ஏறக்குறைய இற்றைக்குப் பன்னிராயிரம் (12,000ஆண்டுகட்கு முன்பே சங்கம் அமைத்து ஆராயும் அளவிற் குத் தமிழ்மொழி வளர்ச்சி பெற்றிருந்தது என்பது புலனாகும். இந்த ஆண்டுக் கணக்கை நம்ப முடியும் என்றால், முச் சங்கங்களிலும் பங்குகொண்டு தமிழ் ஆராய்ந்ததாகக் குறிப் பிடப்பட்டுள்ள புலவர்களின் எண்ணிக்கையையும் - அதாவது. -(4,449-3,700+449=) 8,598 என்னும் எண்ணிக்கையையும் மேளதாளத்தோடு நம்பலாம். தலைச் சங்கத்தார் அகத்தியம் என்னும் நூலையும், இடைச் சங்கத்தார் அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகிய நூல்களையும், கடைச் சங்கத் தார் அகத்தியம், தொல்காப்பியம் ஆகிய நூல்களையும் ஆதார நூல்களாகக் கொண்டு தமிழ் ஆராய்ந்ததாகக் கூறப் பட்டுள்ளது. இந்த நூல்களுக்குள் இன்று முழுமையாகக் கிடைத் துள்ள தொல்காப்பியம் இடைச்சங்க காலத்திலேயே பயன் படுத்தப்பட்டதெனின், அது, ஏறக்குறைய ஏழாயிரம் ஆண்டு கட்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும். இதுபற்றி ஐயப்பாடு எழலாம். ஆனால், தொல்காப்பியம் இற்றைக்கு ஐயாயிரம்