பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 103 என்னும் நூற்பாக்களாலும் அறியலாம். பரிபாடல் அகத்திணை பற்றிய ஒருவகை இசைப் பாடல். இது வெண்பா யாப்புடன் பிற பாக்களின் யாப்பும் உடைத்தாயிருக்கும்; கொச்சகம், அராகம் முதலிய பல உள்ளுறுப்புக்களைப் பெற்றிருக்கும். எந்தப் பரிப்பாடல் பாட்டும் இருபத்தைந்து அடிகளுக்குக் குறையாமலும், நானூறு அடிகளுக்கு மிகாமலும் இருக்கும். இப்பாடல் காதல் சுவையை அடிப்படையாகக் கொண்டு புனையப்படுவதாகும். இவ்வளவு தெளிவாகத் தொல்காப்பியம் இலக்கணம் சொல்லும் அளவுக்கு அன்றே பரிபாடல் தமிழில் வளர்ச்சி பெற்றிருந்தது. தொல்காப்பியத்துக்கு முன்பே பரிபாடலும் கலியும் இல்லையென்றால், தொல்காப்பியர் இவற்றிற்கு இலக்கணம் கூறியிருக்க முடியாதல்லவா? இலக்கியம் கண்ட தற்கே இலக்கணம் என்ற விதி, ஈண்டு மீண்டும் நினைவுக்கு வரவேண்டும். செய்யுட்கள் கிடைக்காவிடினும் செய்யுள் இலக் கணம் கிடைத்திருப்பின் செய்யுட்கள் இருந்ததாக நம்பலாம் என்னும் கருத்தில், பேராசிரியர் தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் பல்வேறிடங்களில் தெரிவித்துள்ள, “...இலக்கணம் உண்மையின் இலக்கியம் காணாமாயினும் அமையும் (183)”; - "இவற்றுக்கு உதாரணம் காணாமையின் காட்டா மாயினாம்; இலக்கணம் உண்மையின் அமையும் என் பது' 'இலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்ற வழிக் கண்டு கொள்க; இப்பொழுது அவை வீழ்ந்தன போலும்'; "நூற்றைம்பது கலியுள்ளும் கைக்கிளை பற்றி இவ்வாறு வரும் கலிவெண்பாட்டுக் காணாமையின் காட்டாமாயினாம்; இலக் கணம் உண்மையின் இலக்கியம் பெற்றவழிக் கண்டு கொள்க (160).”... என்னும் உரைப் பகுதிகளும் இன்ன பிறவும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. எனவே, தலைச்சங்கத்தில் தமிழ் ஆராய்ந்த புலவர்கள் பலர் இயற்றிய பரிபாடல்கள் பலவற்றின் தொகுப்பு நூலே, இறையனார் அகப்பொருள் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிபாடல். என்பது தெளிவு கலிப்பாக்