பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 105 என்னும் பாடற்பகுதி ஈண்டு எண்ணத்தக்கது. குருகின் குஞ் சைத் தன் குஞ்சு எனக் கருதி நாரை பார்க்கச் சென்றதாக இப் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, நாரையும் குரு கும் ஒற்றுமைக்கிடையே வேற்றுமையுடைய பறவைகள் என் பது புலனாகும். இந்தப் பறவைப் பெயர்களால் - அதிலும் முது என்னும் அடைமொழி சேர்த்து, முது நாரை', 'முது குருகு', என்னும் பெயர்களால் இயற்றப்பட்ட நூல்கள் எப்பொருள் பற்றியன வாய் இருக்கலாம்? மற்றும், இவையிரண்டும், தனி முழு நூல் களாக இருக்குமா? அல்லது, பல உதிரிப் படல்களின் தொகுப்பு நூல்களாக இருக்குமா? "இவை பெரும்பாலும் தொகுப்பு நூலாக இருக்கமுடி யாது. ஒரு பொருள் பற்றி ஒரு புலவரால் எழுதப்பட்ட தனி நூலாகவே இருக்கக்கூடும்' - இவ்வாறு கூறுவது எளிது; ஒரு தொல்லைக்கும் இடமில்லை.எவரும் மறுக்கவும் தயங்குவர். ஆனால் இவற்றைத் தொகை நூல்கள் எனக்கூறுவது சிக் கலுக்கு இடம் தரும். பலருடைய மறுப்புக்கு வழி வகுக்கும். இருப்பினும், முடிந்த முடிவாக, இல்லை - ஒரு கொள்கையள வில், இவற்றைத் தொகை நூல்கள் எனக் கூற முயன்று பார்ப்போமே! இந்த முயற்சியின் நோக்கம், ஆராய்ச்சியாளரின் எண்ணத்தைக் கிளறிவிடுவதேயாம். இவை, நாரையைப் பற்றியோ, குரு கைப் பற்றியோ விளக்கி விவரமாகப் பாடிய பறவை - விலங்கியல் துறை (Zoology) நூல்கள் இல்லை. இடைச்சங்க நூல்களுள்ளும் *குருகு' என்னும் பெயரில் ஒரு நூல் இறையனார் அகப் பொருள் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதை நோக்குங்கால், குருகு என்னும் பெயரில் பாடலோ நூலோ இயற்றும் பழக் கம் அந்தக் காலத்தில் இருந்தது என உயத்துணர முடிகிறது. குருகு என்னும் சொல்லுக்கு, பறவையின மல்லாமல், உயிரில் லாத அஃறிணைகளைக் குறிக்கும் வேறு எத்தனையோ பொருள் கள் (அர்த்தங்கள்) உண்டு எனினும், முது குருகு' என்பதி லுள்ள முது என்னும் அடைமொழியை நோக்குங்கால்,