பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ெர்ல்க்ர்ப்பியித்துக்கு முன் 107 ேெய்ரிலும் வழங்கப்பட்டிருக்கலாம். உலகியலில், மிகவும் 'ய்ரிமீrய் இருக்கிறவரைப் பார்த்து நெட்டைக் கொக்கு: "என்று கேலி செய்வது ஈண்டு நினைவு கூரத்தக்கது. எனவே. மிக்வும் நீண்ட இசைப் பாடல்கள் முது நாரை, முது குருகு என்னும் பெயர்களால் வழங்கப்பட்டிருக்கலாம் என உய்த் துணரலாம். 'பரிபாடல்’ என்பது, நானுாறு அடிகள் வரையும் நீண்டிருக்கும் எனத் தொல்காப்பியம் கூறுவது முன்னரே (பக்கம்-102) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பண்டைக் காலத்திலேயே மிகவும் நீளமான பாடல்கள் இயற்றும் மரபு இருந்தது என்பது தெளிவு. ஆகவே, நாரை - குருகு போன்ற நீண்ட இசைப் பாடல்களின் தொகுப்புக்களே முது நாரை, முது குருகு என்னும் நூல்கள். எனவே, இவையிரண்டும் ஒருவகைத் தொகை நூல்களே யாகும் - என்னும் முடிவுக்கு வரலாம். களரியா விரை, வெண்டாளி, களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை, நான்மணிக் கடிகை, சூளாமணி, சிந்தாமணி, திரிகடுகம், சிறு பஞ்ச மூலம், ஏலாதி முதலிய நூற்பெயர்கள் உண்மையில் நேரடியாக நூல்களைக் குறிக்கும் பெயர்கள் அல்ல; இப்பெயர்கள் மலர்கள், விலங்கினம், அணிகலன்கள், மருந்து வகைகள் முதலிய வற்றிற்கு உரிய நேர்ப் பெயர்களாகும். ஆனால், இப் பெயர்கள், உவமையாகு பெயராய், இவை போன்ற இயல்பு டைய நூல்களைக் குறிக்க வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறே முதுநாரை, முதுகுருகு என்னும் நூற்பெயர்களையும் கொள்ளலா மல்லவா? - இனி இரண்டாவது கருத்தாவது: - முதுநாரை, முது குருகு என்னும் நூல்கள், கொக்கினத்தைப் பற்றி மட்டும் விரிவாக விளக்கும் பறவை நூல்கள் அல்ல வாயினும், நாரையும் குருகும் அவ்வந்நூலில் பல்வேறு கோணங்களில் பங்கு கொண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். குயில் -ಹಿತ குயில் பாட்டு, கிளிக் கண்ணி, கிளிப் பாட்டு, கோத்தும்பி முதலிய பெயர்களில் நூல்கள் இருக்கக் காண்கிறோம். யாப்பருங்கல விருத்தியுரையில் 'தும் பிப் பாட்டு’ என்னும் பெயரில் ஒரு பழைய நூல் எடுத்தாளப்பட்டுள்ளது. இவை