பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தமிழ் நூல் தொகுப்புக் கலை யெல்லாம் பறவை நூல்கள் அல்ல; இந்தப் பறவைகளை நோக்கிச் சொல்வது போலவோ, இப் பறவைகளின் வாயிலா கச் சொல்வது போலவோ அமைத்துப் பாடப்பட்ட பல துறை நூல்கள் இவை. இந் நூல்களைப் போன்றனவாக முதுநாரையும் முதுகுருகும் இருக்கலாம் அல்லவா? அன்னம், மயில், கிளி, குயில், பூவை, தோழி, நெஞ்சு, முகில், வண்டு, தென்றல் ஆகிய பத்தும் தூதாக அனுப்பு தற்கு உரியன என்று இரத்தினச் சுருக்கமும் பிரபந்தத் திரட்டும் கூறுகின்றன. இந்த இரு நூல்களின் பட்டியலில் நாரை சேர்க்கப்படாவிடினும், நாரையைத் தூதுவிடும் மரபு தமிழ்ப் புலவர்களிடையே இல்லாமற் போகவில்லை. நாரை விடு தூதாகச் சத்திமுத்தப் புலவர் பாடியுள்ள, 'நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்குபிளங் தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் நீயுகின் மனைவியும் தென் திசைக் குமரி ஆடி வடதிசைக் கேகுவி ராயின் எம்மூர்ச் சக்திமுத்த வாவியுள் தங்கி கனைசுவர்க் கூரைக் கனைகுரல் பல்லி பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே” என்னும் பாடல் பலரும் அறிந்த தொன்றாகும். எனவே, முதுநாரையும் முதுகுருகும், நாரையை நோக்கி-குருகை நோக்கிக் கூறும் இசைப் பாடல்களின் தொகுப்பாகவும் இருக்கலாமன்றோ ! இவ்வாறு பறவைகளை நோக்கிக் கூறும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது அன்று, தலைச்சங்க காலத்திலேயே