பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தமிழ் நூல் தொகுப்புக் கலை மற்றும், சங்கப் புலவர்கள் ஆவிரம் பூவிற்குக் கொடுத் துள்ள சிறப்பினை ஈண்டு ஊன்றி நோக்கவேண்டும். "ஆவிரம் பூ அழகிய பொன்மலராம்; பொன்போல் ஒளி வீசுவ தாம்; நெருப்புப்போல் தகதக' என ஒளிவிட்டு விளங்கு வதாம்; விரிந்து மலர்ந்திருக்குமாம். இந்தக் கருத்துக்களை 'அடர்பொன்அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி, பொல(பொன்) மலர் ஆவிரை, அணியலங்கு ஆவிரைப் பூ என்னும் கலித் தொகைப் பாடல் பகுதிகளாலும், பொன்னேர் ஆவிரைப் புது மலர்' என்னும் குறுந்தொகைப் பாடல் பகுதியாலும், விரிமலர் ஆவிரை' என்னும் குறிஞ்சிப் பாட்டுப் பகுதியாலும், அழல் விளக்கத்துக் களரி யாவிரைக் கிளர் பூங்கோதை" என்னும் அகநானுற்றுப் பாடற் பகுதி யாலும், பிறவற்றாலும் நன்கறி யலாம். இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள இந்தச் சிறப்பினை ஈண்டு விதந்து எடுத்துக் காட்டியதன் நோக்கம், மக்களைக் கவரும் ஆற்றலும் தகுதியும் ஆவிரம் பூவுக்கு மிகுதியாக உண்டு என்பதை அறிவிப் பதேயாம். இவ்வாறாக, மக்களைக் கவரும் தகுதியுடைய ஆவிரம் பூக்களின் தொகுப்பாகிய களரி யாவிரை, என்னும் மாலையின் பெயர், மக்களைக் கவர்ந்த பயனுள்ள பாடல்களின் தொகுப்பாகிய நூலுக்கு வைக்கப் பட்டது. பல மொழிகளிலும் உள்ள தொகை நூல்களுக்கு மாலை” என்னும் பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் பற்றி நாம் முன்னரே பேசியுள்ளோம். தொகை நூலைக் குறிக்கும் ஆந்தாலஜி" (Anthology) என்னும் ஆங்கிலச் சொல்லின் அடிப்படைச் சொல்லாகிய "ஆந்தொலொழியா' என்னும் கிரேக்கச் சொல், 'மலர்களின் தொகுப்பு’ என்னும் பொருள் உடையது என்பதும் நாம் முன்னரே அறிந்த செய்தி. முதல் கிரேக்கத் தொகை 15T gyóð ‘Dramaw’ (Garland of Meleager) ascărgy Ib GLuff கொடுக்கப்பட்டிருப்பதும் நாம் முன்பே அறிந்ததொன்று. எனவே, அன்று மக்களை மிகவும் கவர்ந்த ஆவிரம் பூ மாலை யைக் குறிக்கும், களரியாவிரை’ என்னும் பெயரைக் கொண்ட தமிழ்நூல் ஒரு தொகை நூலாகத் தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.