பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தமிழ் நூல் தொகுப்புக் கலை நக்கீரனார் எழுதியதன்று. முதலில் அவர் உரை எழுதியது உண்மைதான். பின்னர், அந்த உரை பலர் கைப்பட்டு, சிற்சில ப்குதிகள் உடன் சேர்க்கப்பெற்று, இப்பொழுது உள்ள நிலையை அடைந்தது! வடமொழியிலுள்ள வேதங்களும், கிறித்துவ மறையாகிய பைபிளும் பலர் கைப்பட்ட பின்னரே இப்பொழுது உள்ள நிலைமையைப் பெற்றுள்ளன என்னும் உண்மை ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. எனவே இந்த உரையின் முதல் ஆசிரியர் நக்கீரனாரே. உருத்திரசன்மரோ வேறுபிறரோ இதனை எழுதவில்லை. இதற்கு உரையிலேயே அகச்சான்று உள்ளது. நக்கீரனாருக்குப்பின் பலர் கைப்பட்டது என்றோமே! அந்தப் பலருள், யாரோ ஒருவரோ அல்லது இறுதியான வரோ எழுதிச் சேர்த்துள்ள உரைப்பகுதி, அகச் சான்றுக் காக ஈண்டு அப்படியே வருமாறு: 'உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்கு உரை என்பாரும் உளர்; அவர் செய்திலர்; மெய்யுரை கேட்டார் என்க. மதுரை ஆலவாயிற் பெருமானடி களாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரை கண்டு, குமார சுவாமியாற் கேட்கப்பட்டது என்க. இனி உரை நடந்து வந்தவாறு சொல்லுதும்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம்மகனார் கீரங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர் கிழார்க்கு உரைத்தார்; அவர் படியங்கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார்; அவர் மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப்பெருஞ்சேந்தனார்க்கு உரைத் தார்; அவர் செல்லூராசிரியர் ஆண்டைப் பெருங்குமாரனார்க்கு உரைத்தார்; அவர் திருக்குன்றத் தாசிரியர்க்கு உரைத்தார்: அவர் மாதளவனார் இளநாதனார்க்கு உரைத்தார்; அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார். இங்ங்னம் வருகின்றது உரை.” மேலுள்ளது, இறையனார் அகப்பொருளின் முதல் நூற் பாவின் (சூத்திரத்தின்) கீழே, பாயிரம் என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பகுதியிலிருந்து அப்படியே எடுக்கப்பட்ட தாகும். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள உரை நடந்துவந்த