பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தமிழ்நூல் தொகுப்புக் கலை மலரிடம் சில தகுதிகள் உண்டு. அவற்றுள் இன்றியமையாத தகுதி, மக்கள் உள்ளத்தைத் கவரும் நறுமணமாகும். இந்த மலர் மிகவும் மணம் உடையது என்பதனை, நற்றிணையி லுளள, 'கூதிர்க் கூதளத்து அலரி காறும் மாதர் வண்டின் கயவருங் தீங்குரல், (244) 'கூதள நறும் பொழில் புலம்ப" - (313) என்னும் பகுதிகளாலும், அகநானூற்றில் உள்ள சிலம்பிற் கூதளங் கமழும் வெற்பின்' (47) 'குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி அசையா நாற்றம் அசைவளி பகர' (272) என்னும் பகுதிகளாலும் நன்கறியலாம். கூதள மலர்களில் மொய்த்தலால் வண்டுகளின்மேல் அம் மலர் மணம் வீசுவதா கவும், கூதள மலர்களால் பொழில் (சோலை) மணம் பெற்றி ருப்பதாகவும் நற்றிணை கூறுகிறது. கூதள மலர்களால் மலை முழுதும் மணப்பதாகவும், கூதள மலர்களின் விட்டு நீங்காத நறுமணத்தைக் காற்று வெளியில் பரப்புவதாகவும் அக நானுாறு கூறுகிறது. இவ்வாறாக, ஒரு நூலுக்குப் பெயர் வைக்கும் அளவு, வெண்டாளி (கூதாளி) புலவர்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தது. அடுத்து,- வெண்டாளி மலர்கள் அங்கொன்றும் இங் கொன்றுமாக இல்லாமல், அடர்ந்து, தொகுப்பாக நெருங்கி மலர்ந்திருக்கும் இயல்புடையதாயிருப்பது, பல பாடல்களின் அடர்ந்த தொகுப்பாகிய ஒரு நூலுக்குப் பெயர் வைப்பதற்கு ஏற்ற தகுதி பெற்றதாகக் கருதப்படும். இந்த மலருக்கு இந்த இயல்பு உண்டு என்பதனைக் குறுந்தொகையில் உள்ள 'நீர்திகழ் சிலம்பின் ஒராங்கு அவிழ்ந்த வெண்கூ தாளத் தந்தும்பு புதுமலர்' (282) என்னும் பகுதியாலும், அகநானூற்றில் உள்ள 'தண்ணயத்து அமன்ற கூதளங் குழைய' (68)