பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் ஒரே ஒர் இடத்தில் மட்டும் அகவல் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கேயும் ‘அகவல் என்னும் சொல் ஆசிரியப் பா என்னும் பொருளில் இல்லை; அகவல் ஒசை என்னும் பொருளிலேயே பயன்படுத்தப் பெற்றுள்ளது. அஃதா வது,-'அகவல் என்பது ஆசிரியம்மே” என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு, ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது' என்பது பொருளாம். இந்த நூற்பாவிற்கு இதுதான் பொருள் என்ப தனை, இதனை யடுத்துவரும் நூற்பாக்கள் அறிவிக்கும். அவை JJ IT 6)] 3J . - 'அஃதன் றென்ப வெண்பா யாப்பே'. (78) aதுள்ளல் ஓசை கலியென மொழிப.” (79) "தூங்கல் ஓசை வஞ்சி யாகும்.” (80) அகவுதல் இல்லாத (செப்பல்) ஒசை வெண்பாவிற்கு உரிய தாகும். கலிப்பாவின் ஒசைக்குத் துள்ளல் என்று பெயராம். வஞ்சிப் பாவின் ஒசைக்குத் துரங்கல்’ என்று பெயராம். இவ் வாறே, ஆசிரியப்பாவின் ஒசைக்கு அகவல்' என்று பெயராம். ‘அகவல் என்பது தொடர்பாக, தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் கூறியுள்ள உரைப்பகுதி வருமாறு: ‘அகவல் என்னும் ஒசை ஆசிரியத்திற்கு என்றவாறு. அகவல் என்பது ஆசிரியன் இட்டதோர் குறி...எழுத்தளவு மிகாமல் குறையாமல் உச்சரிக்க அவ்வழி நின்ற ஒசையால் ஆசிரியம் வந்தவாறு காண்க... வெண்பாவாக யாக்கப்பட்டது. அகவலோசை யன்று என்றவாறு; எனவே அகவுதல் இல்லாத ஒசையாம். அகவுதல் என்பது ஒரு தொழில்...” எனவே, அகவல் என்றால், அகவுதல்-அகவுகின்ற ஒலி என அறியலாம். தொல்காப்பியர், துள்ளல் ஓசை கலி', 'தூங்கல் ஒசை வஞ்சி’, ‘அகவல் அல்லாதது வெண்பா என்று கூறியிருப் பதைக் கொண்டு, ‘அகவல் என்பது ஆசிரியம்’ என்பதற்கு, ‘அகவல் ஒசை ஆசிரியம்’ என்றுதானே பொருள் கொள்ள வேண்டும், நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியரும் இவ்