பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலத்துக்கு முன் 133 வாறே பொருள் கூறியுள்ளார். அவரது உரைப்பகுதி வருமாறு:- - 'வழக்கினுள் அகவல் என்று வழங்கப்படும் ஒசையே ஆசிரியத்திற்கு உரிய என்ப.' ‘அகவல் என்பது ஆசிரியம்மே” என்னும் நூற்பாவில் உள்ள ' வல்' என்பதற்கு ஆசிரியப்பா எனப் பொருள் கொள்ளா ம , அகவல் ஓசை' என இளம்பூரணர் பொருள் கொண்டி ருக்க, பேராசிரியர் என்னும் உரையாசிரியர், அகவல்' என்ப தற்கு ஆசிரியப்பா எனப் பொருள் கூறியுள்ளார்; இருப்பினும் அகவல் என்றால் அகவுதல் - அகவிக் கூறுதல் என்னும் பொருளைப் பேராசிரியர்கூட மறக்கவில்லை. இதனைத் தெரிந்துகொள்ளப் பேராசிரியரின் உரைப்பகுதி வருமாறு: 'அகவல் என்பது ஆசிரியம்மே-வழக்கினுள் அகவ லென்று வழங்கப்படும் பாவினை ஆசிரியத்திற்குரிய பா வென்ப அகவிக் கூறுதலான் அகவலெனக் கூறப்பட்டது. அஃதா வது, கூற்றும் மாற்றமுமாகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாங் கருதியவாறெல்லாம் வரையாது சொல்லுவதோ ராறும் உண்டு. அதனை வழக்கினுள்ளார் அழைத்தல் என்றுஞ் சொல்லுப. அங்ங்னஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாந் தொடர்ந்து கிடந்த ஒசை அகவல் எனப்படும். அவை தச்சுவினை மாக்கள் கண்ணும், களம் பாடும் வினைஞர் கண்ணும், கட்டும் கழங்கும் இட்டு உரைப்பார் கண்ணும், தம்மில் உறழ்ந்துரைப்பார் கண் ணும், பூசலிழைப்பார் கண்ணும் கேட்கப்படும். கழங்கிட்டு உரைப்பார் அங்ங்னமே வழக்கிலுள்ளதாய்க் கூறும் ஒசை ஆசிரியப்பா வெனப்படும் என்றவாறு.” இது பேராசிரியரின் உரைப்பகுதி, ‘அகவல்’ என்னும் சொல்லுக்கு, பேராசிரியரைப்போல் ஆசிரியப்பா’ எனப் பொருள் கூறாமல், இளம்பூரணரைப் போல ‘அகவல் ஓசை' என நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருப்பினும், அகவுதல்