பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தமிழ் நூல் தொகுப்புக் கலை குறிஞ்சியாழ் வகையில் வியாழம் என ஒன்று உள்ளது. இது வியாழக் குறிஞ்சி யாழ்' எனப்படும். இதற்கேற்பக் குறிஞ்சிப் பண்வகையிலும் வியாழம் என ஒன்று உள்ளது. இது வியா ழக் குறிஞ்சிப் பண்’ எனப்படும். இந்தச் செய்தியை, திவாகர நிகண்டு ஒலிபற்றிய பெயர்த் தொகுதியிலுள்ள, "சாவகக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி ஆகும் குறிஞ்சிக்கு அடுத்த பல் பெயரே' என்னும் நூற்பாவாலும், பிங்கல நிகண்டு.அதுபோக வகையில் உளள, (281)“......... வியாழக் குறிஞ்சி, பஞ்சமம், தக்கணாதி, சாவகக் குறிஞ்சி, ஆநங்தை, யென இவை......... - குறிஞ்சி யாழ்த்திற மாகக் கூறுவர்' (21) என்னும் நூற்பகுதியாலும் நன்கறியலாம். வியாழக் குறிஞ்சி யைப் பற்றி எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நிகண்டு களில் கூறப்பட்டுள்ள குறிப்பைக் கண்டோம். ஆனால், ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே, வியாழக் குறிஞ்சி என்னும் பண் அமைத்துத் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்' எனச் சுந்தரரால் பாராட்டப் பெற்றவரும், திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்னும் யாழ் வல்லுநரை உடன் வைத்துக் கொண்டு பாடிவந்தவருமாகிய திருஞான சம்பந்தர், தம் தேவாரப் பதி கங்களுள் இருபத்தைந்து பதிகங்களை வியாழக் குறிஞ்சி என் னும் பண் அமைத்துப் பாடியுள்ளார். இதனால், வியாழக் குறிஞ்சி, என்னும் பண்ணுக்கு அந்தக் காலத்தில் இருந்த செல் வாக்கும் வரவேற்பும் நனி விளங்கும். எனவே, வியாழ மாலை, அகவல்' என்னும் நூற்பெயரில், உள்ள 'வியாழம் என்பது குறிஞ்சிப் பண்ணை உணர்த்துவதேயாகும். ஆகவே, வியாழ மாலை அகவல் என்னும் நூல், குறிஞ்சி யாழ் கொண்டு இசைக் கும் குறிஞ்சிப் பண் அமைந்த அகவல் பாடல்களின் தொகுப்பு நூல் என்பது நன்கு புலனாகும். இந்தக் கருத்துக்குத் துணை