பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைச்சங்க காலத்துக்கு முன் 139 புரியச் சிலப்பதிகாரத்தில் தக்கதோர் அகச்சான்று உள்ளது. வடநாடு சென்று வெற்றிவாகை சூடி மீண்ட சேரன் செங் குட்டுவன், அகவல் பாடல் பாடும் அகவல் மகளிரைக் கொண்டு, மறவர்களுக்கு இசை விருந்து அளித்தானாம். அக வல் மகளிர் யாழ் மீட்டிக் குறிஞ்சிப் பண் இசைத்துப் பாடி மகிழ்வித்தார்களாம். இதனைச் சிலப்பதிகாரம் நடுகற் காதை யில் உள்ள, - “வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇச் அந்தீங் குறிஞ்சி அகவல் மகளிரின் கைந்தர்க்கு ஓங்கிய வருவிருந்து அயர்ந்து 31 -36 என்னும் பகுதி தெரிவிக்கிறது. ஈண்டு, குறிஞ்சி, கவர்ச்சியானது - தித்திப்பானது என்னும் பொருளில் அந்திங் குறிஞ்சி என்று சிறப்பிக்கப்பட்டிருப்பதும், அடுத்து அகவல் என்பதோடு தொடர்புறுத்தப் பட்டிருப்பதும் நுணுகி நோக்கி மகிழ்தற் குரியது. இதுகாறுங் கூறியவற்றால், குறிஞ்சிப் பண் அமைந்த பாக் களாகிய பூக்களால் தொகுக்கப்பட்ட மாலையே வியாழ மாலை அகவல்' என்னும் நூல் என்பது பெறப்படும். மற்றும், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, கலி ஆகியவற்றைப் பேர்லவே, இந்நூலும் ஒர் இசைத்தமிழ்ப் பாடல் தொகை நூல் என்பதும் தெளிவாகும். இந்நூல், வியாழமாலை அகவல்’ என முழுப்பெயரால் நீளமாகவும், இறுதிப்பகுதியாகிய அகவல்’ என்னும் பெயரால் குறுக்கமாகவும் வழங்கப்பெறும் என முன்னர்க்கண்டோம். இவ் விருவகையே யன்றி,முற் பகுதியாகிய வியாழ மாலை' என்னும் பெயராலும் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஜவகர்லால்' நேரு என்பவரை அந்த முழுப் பெயராலும் அழைப்பதுண்டுஇறுதிப்பகுதியாகிய நேரு என்பதாலும் வழங்குவதுண்டு, முற் பகுதியாகிய ஜவகர்லால்' என்பதாலும் வழங்குவதுண்டு. இவ் வாறே, இந்நூல் வியாழ மாலை என்றும் வழங்கப்படுகிறது. இதனை, செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஒலைச் சுவ டிப் பாடலிலுள்ள,