பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழ் நூல் தொகுப்புக் கலை மறனுடைய மரபின் ஏழே ஏனை. அமர்கொள் மரபின் வாகையும் சிறந்த பாடாண் பாட்டொடு பொதுவியல் என்ப" எனவும், "கைக்கிளை ஏனைப் பெருந்திணை என்றாங்கு அத்திணை யிரண்டும் அகத்திணைப் புறனே எனவும், புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல் வேண்டும். அகத் திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல்’ (தொல், மரபு, 112)என்னும் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி, மிகைப்படக் கூறல்’, தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்’ (தொல், மரபு 110) என்னும் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய தாஞ்சி நிலையாமை யாதலானும், பொது வியல் என்பது, - 'பல்அமர் செய்து படையுள் தப்பிய நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின் திறப்பட மொழிந்து தெரிய விரித்து முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே' 'முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே' எனத் தாமே கூறுகின்றா ராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கோடற்கண்ணும் கூறாமையானும், கைக் கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின், அகத்தினை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரம்மம் முதலாகச் சொல்லப்பட மணம் எட்டனுள்ளும் யாழோர் புறப்பொருளாதல் வேண்டுதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக் கிற்கும் பொருந்தாது என்க' என்னும் உரைப் பகுதியாலும் அடுத்து, : வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்’ என்னும் தொல்காப்பியப் புறத்திணை இயல் (2) நூற்பாவின் கீழ் இளம்பூரணர் தாம் எழுதியுள்ள,