பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தமிழ் நூல் தொகுப்புக் கலை வேலன்' என்னும் (5) நூற்பாவின் இறுதியில் இளம்பூரணர் தாம் எழுதியுள்ள, 'பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறை கூறினாராகலின் புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறை யாகலின், அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம், ஏனையவும் இவ் வாறு மயங்கக் கூறலும். குன்றக் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாதலான், உய்த்துணர்ந்து கண்டு கொள்க...” என்னும் உரைப் பகுதியாலும், பன்னிரு படலத்தின் வெட்சிப் படலத்திற்கும் தொல்காப்பியர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை-அதாவது-அதனைத் தொல்காப்பியர் இயற்ற வில்லை என்னும் செய்தியைத் தெளிவாகக் கூறி யுள்ளார். அடுத்து நச்சினார்க்கினியரைக் கண்டு அவர் கூறும் மறுப்புரைகளைப் கேட்போம்: தொல்காப்பியம்-புறத்தினை யியலில் உள்ள, வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்' என்னும் (2) நூற்பாவின் கீழ் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள, வேந்து விடு முனைஞர் என்றமையான் இருபெரு வேந்தரும் தண்டத் தலைவரை ஏவிவிடுவர் என்றும், ஆதந்தோம்பல் என்றதனால் களவின்கண் கொண்ட ஆவினைமீட்டுத் தந்தோம்பு மென்றும் பொருள் கூறுமாறு சூத்திரஞ் செய்தாராகலின், இருபொரு வேந்தர் தண்டத் தலைவரும் அவரேவலான் நிரை கோடற்கும் மீட்டற்கும் உரியராயினார்; ஆகவே இருவர்க்கும் கோடற் றொழில் உள தாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின், மீட்டல் கரந்தை என்பரால் எனின், அதனையும் இச் சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சி யென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக் கரந்தை