பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தமிழ் நூல் தொகுப்புக் கலை தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த...” எனப் பாயிரஞ் செய்தற்கு உடன்பட்டமையின் என்பது-" என்னும் உரைப் பகுதியைக் கூர்ந்து நோக்குங்கால் அறி யப்படுவதாவது:-'பன்னிரு படலம் என்னும் நூலின் முகப் பில், வீங்கு கடல் உடுத்த' என்று தொடங்கும் பாயிரச் செய்யுள் ஒன்று உள்ளது. இந்தச் செய்யுள், அகத்தியம் என் னும் முதல் நூலை நன்கு கற்று உணர்ந்தவர்களாகிய தொல் காப்பியரும் பிறருமாகச் சேர்ந்து பன்னிரு பட்லத்தை இயற்றி னர் எனக் கூறுகிறது. இந்தப் பன்னிருபடலத்தை முதல் நூலாகக் கொண்டு ஐயனாரிதனார் என்பவர் புறப் பொருள் வெண்பா மாலை என்னும் நூலை இயற்றினார். இந்த வெண்பா மாலை நூலின் பாயிரச் செய்யுளும், அகத்தியரின் மாணாக்கர்களாகிய தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவ ரும் சேர்ந்து பன்னிரு படலம் என்னும் நூலை இயற்றினர் எனக் கூறுகிறது. பேராசிரியர் தமது உரைப்பகுதியின் ஒரிடத் தில், பன்னிரு படலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட்டது எனக் கூறியிருப்பது, பொருந் தக் கற்றுப் புரைதப உணர்ந்தோருள் தலைவராயினார் தொல்காப்பியனார்’ என்னும் கருத்துப் புனைந்துரையாகும் எனச் சுட்டிக் காட்டுகிறதேயன்றி, தொல்காப்பியர் முதலி யோர் சேர்ந்து பன்னிரு படலம் இயற்றினர் என்பது புனைந் துரை எனச் சுட்டியதாகாது. அதனால்தான் பேராசிரியர், பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை ஆகிய நூல்களின் பாயிரச் - செய்யுட்களை ஈண்டு முழுமையும் தரா மல் தொல்காப்பியரை முதன்மையாகக் குறிப்பிடும் இடங்க ளோடு நிறுத்திக் கொண்டார். தொல்காப்பியர்க்குத் தலைமை யளிக்கும் பல்காப்பியப் பாடலைப் ஈண்டு எடுத்துக் காட்டியி ருப்பதும் ஒப்புநோக்கத் தக்கது. எனவே, பன்னிரு படலத்தில் தொல்காப்பியர்க்கு உள்ள பங்கைப் பேராசிரியர் மறுக்க வில்லை என்பது ஒரு வாறு புலனாகும். இந்தச் சிக்கலுக்கு முடிவுரை வழங்குவது போல், சிவ