பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தமிழ் நூல் தொகுப்புக் கலை காரத்தால் பிண்டமாயிற்று இந்நூல் (தொல்காப்பியம்) என்று கொள்க; இவற்றைச் சிறு நூல் இடைநூல், பெரு நூல் எனப் படும்.' - என்னும் உரைப்பகுதியால் அறியலாம். இளம்பூரணரின் கருத்துப்படி, - ஒருவகைப் பிரிவும் இல்லாமல் அறுபது சூத்திரங் கள் கொண்ட இறையனார் களவியல் சிறுநூல் வகையைச் சார்ந்ததாகும்; பெரும் பிரிவு இல்லாமல் சிறு பிரிவுகள் மட்டும் உடைய பன்னிருபடலம் இடைநூல் வகையைச் சேர்ந்ததாகும்; பெரும்பிரிவும் சிறு பிரிவும் உடைய தொல்காப்பியம் பெருநூல்' வகையைச் சேர்ந்ததாகும். எனவே, பன்னிரு படலத்தில், படலம் என்னும் பெயருடைய பன்னிரண்டு தனிப்பிரிவுகள் மட்டும் உள்ளமை புலனாகும். படலம் என்னும் பிரிவு பிற்கால இலக்கியங்களில் இருக்கக் காண்கிறோம். ஆனால், தொல்காப்பியர் காலமாகிய இடைச் சங்க காலத்தில் படலம்' என்னும் சொல் ஆட்சியில் இருந்ததா என்ற ஐயம் எழலாம். படலம் என்னும் சொல் தொல்காப் பியத்திலேயே உள்ளது. இதற்கு அகச்சான்றாக, தொல் காப்பியம் - செய்யுளியலில், 'ஒரு பொருள் நுதலிய சூத்திரத் தானும் இன மொழி கிளந்த ஒத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும் என்று ஆங்கனை மரபின் இயலும் என்ப.” (161) ஒரு நெறி யின்றி விரவிய பொருளால் பொதுமொழி தொடரின் அது படலம் ஆகும்.' (164) என்னும் நூற்பாக்கள் உள்ளமை காண்க. எனவே, பன்னிரு படலம், தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் பங்கு பெற் றுள்ள இடைச்சங்க கால நூல் என்று கொள்ளத் தயங்க வேண்டியதில்லை. பதினாறு படலம் என்னும் பெயரிலும் ஒர் இசைத்தமிழ் நூல் உள்ளது என்னும் செய்தி, ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. அந்நூல் பற்றிப் பின்னர் தனித் தலைப்பில் பேசப்படும். -