பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தமிழ் நூல் தொகுப்புக் கலை கலம்.உறுப்பியலில் உள்ள, வஞ்சியுள் அகவல் மயங்கினும், வரையார்' என்னும் (9 ஆம்) நூற்பாவின்கீழ் எழுதப்பட்டுள்ள 'வஞ்சியுள் அகவல் மயங்கவும் பெறும் என்னாது மயங்கி னும் வரையார் என்று மற்றொரு வாய்பாட்டாற் கொல்ல வேண்டியது என்னை? வஞ்சிப்பாவினுள் ஆசிரியம் மயங்கி வரு வது அகத்திணை அல்லாத வழியே என்ப ஒருசாராசிரியர், என்றற்கு வேண்டப்பட்டது; என்னை? 'அகத்திணை மருங்கின் அளவு மயங்கி விதப்ப மற்றவை வேறா வேண்டி வஞ்சி அடியின் யாத்தனர் வஞ்சி அகத்திணை மருங்கின் அணையு மாறே.” என்பது பன்னிரு படலத்துட் பெருந்தினைப் படலத்துச் சூத் திரம் ஆகலின்.' என்னும் உரைப் பகுதியிலிருந்து பன்னிருபடலத்தின் பெருந் திணைப் படல நூற்பா ஒன்று தெரியவருகிறது. அடுத்து, - கைக்கிளைப் படலத்தைச் சேர்ந்த மூன்று நூற்பாக்கள், தொல் காப்பியச் செய்யுளியலுக்குப் பேராசிரியர் எழுதியுள்ள உரைப் பகுதிகளால் அறியப்படுகின்றன. அவையாவன:- தொல்காப் பியச் செய்யுளியலில் உள்ள கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள்’ என்று தொடங்கும் (160 ஆம்) நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள, “... அவ்விரண்டு பாவின் கூட்டம் இரண்டடியால் வாரா வாகலானும் அவையும் நான்கடியிற் சுருங்கா வென்பது உய்த் துக்கொண் டுணர வைத்தான என்பது, என்னை? கைக்கிளைப் படலத்துள்: போற்றி வெண்பா வாகி மற்றதன் இறுதி ஐஞ்சீர் ஆசிரி யம்மே." என்றார் ஆகலின்...” என்னும் உரைப்பகுதியாலும், அதே நூற்பாவின் கீழ் அவர் மேலும் தொடர்ந்து எமுதியுள்ள, “...இது நெஞ்சிற்கு உரைத்தது எனத் தலைமகள் சொல்