பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தமிழ் நூல் தொகுப்புக் கலை மலைபடு கடாத்தில் உள்ள தீயின் அன்ன ஒண்செங் காந்தள்' என்னும் (145 - ஆம்) அடியின்கீழ் நச்சினார்க்கினியர் எழுதி யுள்ள, "...செய்யுள் (மலைபடு கடாம்) செய்த கெளசிகனார் ஆனந்தக் குற்றம் என்னும் குற்றம் அறியாமல் செய்யுள் செய்தாரேல் இவர் நல்லிசைப் புலவர் ஆகார்; இவர் செய்த செய்யுளை (மலைபடுகடாத்தை) நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் (தொகுக்காமல்) நீக்குவர்; அங்ங்ணம் நீக்காது கோத் தற்குக் (தொகுத்ததற்குக்) காரணம், ஆனந்தக் குற்றம் என்பதொரு குற்றம் இச் செய்யுட்கு உறாமையான் என்றுணர்க.” என்னும் உரைப்பகுதியால் நன்கு தெளியலாம். பத்துப் பாட்டு என்னும் தொகை நூலை, கடைச் சங்க காலத்தில் சங்கப் புலவர்கள் தொகுத்தனர் என்னும் உண்மை நச்சினார்க் கினியர் உரையால் அறியப்படும். சங்கத் தொகை நூல்கள் கடைச் சங்க காலத்திற்குப் பின், கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டன என்று சிலர் கூறும் கருத்துப் பொருந்தாது என்பதும், நச்சினார்க்கினியரின் உரைப் பகுதியால் தெரியவரும். கடைச் சங்க காலம் எது என்பது முன்னரே ஒரிடத்தில் கூறப்பட்டுள்ளது. -ošová (3.5m.30% (513)3&sjär “An Anthology of Longer Poems" என்னும் நூலும் ஒன்று என முன்னரே ஒரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. நீளமான பாடல்களின் தொகுப்பு என்பது இத்தொகை நூலின் பெயர். இதில் இருபத்திரண்டு நீளமான பாடல்கள் உள்ளன; இவற்றுள் மாத்யூ ஆர்னால்டு' (Mathew Arnold ) sTs5rt raufi F)u si) sólu, “Sohrap And Rustum" என்னும் பாடல் 892 அடிகள் கொண்டதாகும். இவ்வாறு நீள மான பாடல்கள் கொண்டுள்ள் இந்த ஆங்கிலத் தொகுப்புப் போன்றதாக தமது பத்துப்பாட்டைக் கூறலாம் அல்லவா? பழத்தமிழ் நூற் பாட்டுக்களுள் மிகவும் நீளமானவை இவையே யன்றோ?