பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. எட்டுத் தொகை பதினெண் மேற்கணக்கில், பத்துப்பாட்டே யன்றி. எட்டுத் தொகை என்னும் தொகைப் பெயரால் சுட்டப்படும் எட்டு நூல்களும் அடங்கும். இவற்றுள், ஒவ்வொரு நூலும் ஒரு தொகை நூலாகும் : அஃதாவது, பலரால் பாடப்பட்ட பல பாடல்களின் தொகுப்புநூலாகும். இதனாலேயே இவ்வெட்டு நூல்களும் எட்டுத் தொகை' என வழங்கப்படுகின்றன. இன்னும் இவை. எண்கோவை’ எனவும், எண் பெருந் தொகை' எனவும் வழங்கப்படுவதும் உண்டு. எப்பொருள் எச்சொலின், என்னும் நன்னூல் (387 - ஆம்) நூற் பாவின் உரையில், ஐம்பெருங் காப்பியம், எண் பெருந்தொகை. பத் துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்னும் இவ் விலக் கியங்களுள்ளும் விரிந்த உரிச்சொல் பனுவல்களுள்ளும் உரைத் தவாறு அறிந்து வழங்குக;-என, மயிலை நாதர் எட்டுத் தொகையை எண்பெருந்தொகை' என வழங்கியிருப்பது காண்க. இந்தத் தொகை நூல்களை இளம்பூரணர் செய்யுட் கோவை' என்னும் சிறப்புப் பெயரால் குறிப்பிட்டுள்ளார். இதனை, தொல்காப்பியம் அகத்திணையியலில் மாயோன் மேய காடுறை புலகமும்’ என்று தொடங்கும்' (5ஆம்) நாற் பாவின் கீழ் அவர் வரைந்துள்ள, "...இன்னும், சொல்லிய முறையாற் சொல்லவும் படும்' என்றதனான், இம் முறையன்றிச் சொல்லவும் படும் என்று கொள்க. அஃதாவது, அவற்றுள் யா தானும் ஒன்றை முன்னும் பின்னுமாக வைத்துக் கூறுதல். அது சான்றோர் செய்யுட் கோவையினும் பிற நூலகத்துங் கண்டு கொள்க’ என்னும் உரைப்பகுதியால் அறியலாம். எட்டுத்தொகை யைப் பற்றி ஆராயுமுன், எட்டு நூல்களும் இன்னின்னவை என்பதை அறிய வேண்டுமல்லவா? இவற்றை. 'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்