பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுத் தொகை 223 திரட்டு ஆகையாலும், இது தனிநூலாகத் தொகுக்கப் பெற்றது. இந்நூல் தொடர்பான ஏனைய விவரங்களைப் பின்னால் தனித்தலைப்பில் அறியலாம். - பரிபாடல் - எட்டுத் தொகை நூல்களுள் இறுதியானதாகிய பரிபாடல் என்னும் நூல், பரிபாட்டு என்னும் தனிப்பா வகையால் ஆனதாகையாலும், மிகக்குறைந்த அளவில் எழுபது பாடல் களே உடையதாதலாலும், இறுதியில் தனி நூலாகத் தொகுக்கப் பட்டது. இந்நூல் சார்பான விவரங்களையும் பின்னால் தனித் தலைப்பில் விளக்கமாக அறியலாம். இதுகாறும், எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றுமுறை குறித்து ஓரளவு ஆராய்ந்தோம். மதுரையில் தமிழ் ஆராய்ந்த சங்கத்தார்கள் இந்நூல்களைத் தொகுத்தனர் என்ற குறிப்பு, அகநானூற்றுப் பாயிரப் பாடலிலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அது வருமாறு:- -- - 'கின்ற நீதி வென்ற நேமிப் பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண் அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள் நெடிய வாகி அடிநிமிர்ங் தொழுகிய இன்பப் பகுதி யின் பொருட் பாடல் நனு றெடுத்து நூனவில் புலவர் களித்த மும்மதக் களிற்றி யானைகிரை மணியொடு முடைந்த அணிகிளர் பவளம் மேவிய கித்திலக் கோவை என்றாங்கு அத்தகு பண்பின் முத்திற மாக முன்னினர் தொகுத்த நன்னெடுங் தொகைக்கு..." என்னும் பகுதியை ஊன்றி நோக்கின், நாம் மேலே தந்துள்ள தொகுப்பு வரலாற்று முறை பொருத்தமானது என்பது புல னாகும். இனி, எட்டுத் தொகை நூல்களுள் ஒவ்வொன்றினையும் தனித்தனியாக விதந்து ஆராய்வோம்.