பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை 253 எடுத்தவர் எழுதிவிட்டிருக்கிறார். இந்தச் சுவடிகளே எங்கும் பரவிவிட்டன. இவ்வாறாகத் தவறியமைந்த அந்தப் பாடலை, நற்றிணையைப் பற்றிய அடுத்த தலைப்பில் காண்போம்: ஆசிரியர்கள் இந்நூலின் ஆசிரியர்கள் இருநூற்றைவருள், முதல் பாடலை இயற்றியவர் திப்புத் தோளார்’ என்பவர்; இறுதிப் பாடலின் ஆசிரியர் 'அம்மூவனார் ஆவார். நூலின் முகப்ல்பி உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலின் ஆசிரியர் பர்ரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலாசிரியர்களுள் பத்துப் பாடல்களுக் குக் குறையாமல் பாடியுள்ள ஆசிரியர்களின் பெயர்களைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கையுடன் வரிசைப்படுத்திக் காண்பாம் : புலவர்கள் பாடல் எண்ணிக்கை 1. கபிலர் - ... 29 2. பரணர் - ... 17 3. ஒளவையார் ... 15 4. அம்மூவனார் ... 11 5. பாலை பாடிய பெருங்கடுங்கோ ... 10 குறுந்தொகையில் மிகுதியான (29) பாடல்களைப் பாடி முதலிடம் பெற்றுள்ளவர் கபிலர் என்பதும், அடுத்த எண்ணிக் கையில் (17) பாடி இரண்டாவது இடம் பெற்றிருப்பவர் பரணர் என்பதும் விளங்குகிறது. புலவர்கள், கபில பரணர்' (TGT இவ்விருவரையும் சிறப்பித்துத் தலைமையானவர்களாகக் குறிப்பிட்டிருப்பதும், இலக்கண உரையாசிரியர்கள் கபிலரது பாட்டு’ என எடுத்துக்காட்டுத் தந்திருப்பதும் பொருத்தமே யாகும். இந்நூலில், ஒளவையார் மூன்றாவது இடம் பெற்றுள் GIT fr/T. . நூலின் அமைப்பும் மாண்பும் இந்த நூலில், முதலில் பாடலும், பாடலின் கீழே நூலைத் தொகுத்தவராலோ பிறராலோ தரப்பட்ட துறையும், துறை யின் கீழே பாடலாசிரியரின் பெயரும் அமைக்கப் பெற்றுள்