பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டடிப்பேரெல்லை யும், கொண்ட நானூறு ஆசிரியப் பாக்களின் தொகுப்பாகிய 'நற்றிணை நானூறு எட்டுத் தொகையில் மூன்றாவது நூலா கும். ஐந்து அகத்திணைகள் பற்றிய தொகை நூல்களுக்குள்ளே, திணை' என்னும் பெயர் உடைய - அதிலும்.நல்திணை' (நற் றிணை) என்னும் பெயர் உடைய நூல் இஃது ஒன்றுதான்! இந் நூலின் தொகுப்புமுறை முன்பே விளக்கப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் ஏறக்குறைய இருபது இடங்களில் நற்றிணை என நூற்பெயரைக் குறிப்பிட்டுத் தொல்காப்பிய உரையில் பாடல்களை எடுத்தாண்டுள்ளார். ஆசிரியர்கள்: - . இந்நூலில் ஐம்பத்தேழு ஆசிரியர்களின் பெயர்கள் தெரிய வில்லை. பெயர் தெரிந்த புலவர்கள் நூற்றெழுபத்தைவர். முதல் பாடலின் ஆசிரியர் இறுதிப் பாட்வின் ஆசிரியர் ஆலங்குடி வங்கனார். நூலுக்கு முன்னால் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலின் ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவ னார். இந் நூலாசிரியர்களுள் மிகுந்த பாடல்கள் பாடி முத லிடம் பெற்றிருப்பவர்கள் கபிலரும் உலோச்சனாருமாவர். இவர்கள் இருபது பாடல்கள் பாடியுள்ளனர். பன்னிரண்டு வீதம் பாடியுள்ள பரணரும் மருதனிள நாகனாரும் முறையே மூன்றாம் இடம் பெறுகின்றனர். பத்துப் பத்துப் பாடல்கள் பாடியுள்ள அம்மூவனாரும் பாலை பாடிய பெருங்கடுங்கோவும் முறையே ஐந்தாம் இடத்திற்கு உரிய வராவர்.நற்றிணையிலும் கபிலரும் பரணரும் முதன்மை பெற்றிருப்பது காண்க. நூல் அமைப்பு: இந்நூலில்பாடலின் முன்னால், முதலில் ஆசிரியர் பெயரும் அடுத்துத் திணை-துறைப் பெயரும் உள்ளன. பின்னரே பாடல் தரப்பட்டுள்ளது. நற்றிணையில், குறிஞ்சித்திணைக்கு 132 பாடல்களும், பாலைக்கு 106 பாடல்களும், நெய்தலுக்கு 101 பாடல்களும், மருதத்திற்கு 32 பாக்களும், முல்லைக்கு 29 பாக்