பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறு 263 அளவுக்கே கிடைத்ததால், அடியளவு பாராமல் நானுாறு பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக உருவாக்கினர். நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்று நூல்களிலும், கடவுள் வாழ்த்து நீங்கலாக நானுாறு பாடல் கள் வீதம் உள்ளன. ஆனால், புறநானூற்றிலோ, பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள்வாழ்த்துப் பாடல் உட்பட நானூறு பாடல்கள் உள்ளன. மேற்கொண்டு இருக்க வேண்டிய இன்னொரு பாடல் என்ன ஆயிற்று என்று தெரிய வில்லை. இந்த நானூறு பாடல்களுக்குள்ளேயே, 267 ஆம் பாடலும் 268 - ஆம் பாடலும் கிடைக்கவில்லை. இந்த இரண் டுடன், இன்னும் ஒரு பாடல் கிடைக்கவில்லை எனக்கூறிக் கிடைக்காத பாடல்களின் எண் ணிக்கையை மூன்றாக்கலாம். ஒருவேளை, இயற்கையாகவே, பாரதம்பாடிய பெருந்தேவனா ரின் கடவுள்வாழ்த்துப் பாடலையும் சேர்த்துத்தான் நானுாறு பாடல்களாகத் தொகுத்தார்களோ என்னவோ! கடவுள் வாழ்த்து அகத்திணையாகாது, புறத்திணையைச் சேர்ந்ததேயா கும். எனவே, மற்ற மூன்று அகப்பொருள் தொகை நூல்களில் நானுாறு பாடல்களுள் ஒன்றாகக் கடவுள் வாழ்த்துப் பாடலை அடக்காமல், அதனைத் தனியாத முன்னால் அமைத்தனர். ஆனால், புறநானுாறு புறப்பொருள் நூல் ஆதலின், நானூறு பாடல்களுக்குள் ஒன்றாகக் கடவுள் வாழ்த்தினையும் சேர்க்க முடிந்தது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர் என்பது ஈண்டு நினைவிருக்கவேண்டும். நானூறு பாடல்களுள் 267, 268 - ஆம் பாடல்கள் முற்றும் கிடைக்கவில்லை. 328 - ஆம் பாடலில், முதல் அடியின் முதல் சீரின் முதல் அசை இல்லை. 370 - ஆம் பாடலில் முதல் அடி முழுதும் இல்லை. 244 - ஆம் பாடலில் முதல் இரண்டரை அடிகள் மட்டுமே உள, பிற்பகுதி இல்லை. 355 - ஆம் பாடலில் முதல் மூன்றடிகள் தவிரப் பிற்பகுதி இல்லை. இவைதவிர, ஏறக்குறைய 40 பாடல்களுக்கு இடையிடையே சில சொற் களும் - சொற்றொடர்களும் - அடிகளும் இல்லை. இந்த இழப் புக்கள் சுவடி ஒலைகளின் சிதைவால் ஏற்பட்டவை.