பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தமிழ் நூல் தொகுப்புக் கலை களும் உண்டு எனப் பன்னிரு படலம் போன்ற நூல்கள் கூறி யிருத்தலாலும், திருக்குறளிலும் நாலடியாரிலுங்கூட இந்த மூன்று நிலைகளும் இருத்தலாலும், இவ்வாறு புறநானூற்றிலும் அமைத்துப் பார்க்கலாமே எனப் பின்வந்தவர் எவரோ இந்த மூன்று நிலைகளையும் புதிதாகப் புறநானூற்றிலும் புகுத்தி யிருக்க வேண்டும். இது சார்பாக இவ்வளவுதான் சொல்லமுடி கிறது. மேலும் அறிஞர்கள் ஆராய்ந்து காண்பாராக! புறநானூற்றுப் புலவர்கள் புறநானூற்றில் கிடைக்காத இரண்டு பாடல்கள் உட்பட மொத்தம் பதினாறு பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் தெரிய வில்லை, பெயர் தெரிந்த புலவர்கள் நூற்றைம்பத்தெழுவர் (157 பேர்) ஆவர். இவர்களுள், 33 பாடல்களுக்கு உரியவ ரான ஒளவையார் முதலிடமும், 28 பாடல்கட்கு உரிய கபிலர் இரண்டாவது இடமும், 15 பாடல்கட்கு உரிய கோவூர்க்கிழார் மூன்றாவது இடமும், 13 பாடல்களுக்கு உரியவர்களான பரணரும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் நான்காவது இடமும், பத்துப் பாடல்களுக்கு உரிய பெருஞ்சித்திரனார் ஆறாவது இடமும் முறையே பெற்றுள்ளனர். இந்த நூலிலும் ஒளவையாருக்கு அடுத்தபடி, கபிலர் முன்னணியில் இருப்பது காண்க. அவரோடு இணைந்த பரணரும் அப்படியொன்றும் குறைந்துவிடவில்லை. அகப்பொருள் பற்றிய தொகை நூல்களிலும் புறப்பொருள் பற்றிய புறநானூற்றில் ஒளவையாரின் பாடல்கள் மிக்க இடம் பெற்றிருப்பது, அந்த நாளில் அரசர்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கின் மிகுதியை அறிவிக்கின்றது. இரண்டாயி ரம் ஆண்டுகளுக்குமுன் எந்த நாட்டில் இவ்வளவுசெல்வாக் கினைப் பெண்மணி யொருவர் பெற்றிருக்க முடியும்! புறநானூற்றைத் தொகுத்தவர்கள் பொன்னைத்தொகுத் துத் தந்தவர்களாவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் முதலிய உயர்ந்த கோட்பாடுகளை உலகிற்கு அளிக்கும் புற நானூற்றைத் தொகுத்துக் கொடுத்தவர்க்கு உலகம் செய்யக் கூடிய கைம்மாறு யாதோ? மற்றும், முறையான தமிழக வர லாறு இல்லாத குறையை இந்நூல் ஒரளவேனும் ஈடு செய்வ தால் இந்நூலின் தொகுப்பாளர்க்குத் தமிழர்கள் செய்யக்கூடிய கடப்பாடு என்னவோ?