பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறுநூறு 277 என்னும் வெண்பாவால் உணரலாம். இந்த ஐவரும், பாடிய ஐந்நூறு பாடல்களுக்கு முன்னால் அமைக்கப் பெற்றுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்; பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். தொகுப்பாளர்கள் - இந்நூல் படியின் இறுதியில், “இத்தொகை தொகுத்தார் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; இத்தொகை தொகுப் பித்தார் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை யார்'-என, நூல் தொகுத்தவர் பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ன. இந்நூலைத் தொகுத்த கூடலூர் கிழார் சங்கப்புலவர்களுள் ஒருவர். இவர் பாடல்கள் குறுந்தொகையில் (166, 167, 214) மூன்றும், புறநானூற்றில் ஒன்றும் உள்ளன. இவர் புலமை முதிர்ந்தவர் என்பதனைப் ‘புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்னும்பெயர் அமைப் பால் அறியலாம். கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய முது மொழிக் காஞ்சியை இயற்றிய மதுரைக் கூடலூர் கிழார்' என்னும் புலவரினும் இவர் வேறானவர் என்பதை யறியவும், ‘புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்னும் சிறப்பு அடை மொழிப் பெயர் உதவுகிறது. கூடலூர் என்னும் பெயரில் பல ஊர்கள் உள்ளன. புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் மலை நாட்டன்கண் உள்ள கூடலூர்க்காரர். இவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனின் விருப்பத்தின்படி இந்நூலைத் தொகுத்தார். இந்தச் சேரமன்னன் சேரநாட்டுக் கடற்கரைப் பட்டின மாகிய தொண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன்; தமிழ் ஆர்வம் உடையவன்; தமிழ் வளர்த்தவன்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன். இவனைக் கூடலூர்கிழார், குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார் ஆகிய புலவர் மூவர் போற்றிப் பாடியுள்ளனர். எனவே, இவன் கூடலூர் கிழாரைக் கொண்டு ஐங்குறுநூற்றைத் தொகுப் பித்ததில் வியப்பில்லை. இவர்கள் இருவருக்கு மிடையே நெருங்கிய பிணைப்பு இருந்தமை புறநானூற் றுப் பாடல் ஒன்றால் புலப்படுகிறது. இந்தச் சேரனது