பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறுநூறு 289 னும், பத்துப் பாட்டும் கலித்தொகையும் ஐங்குறு நூறும் கீழ்க் கணக்கும் சிற்றட்டகமும் முதலாகிய சான்றோர் செய்யுட்கள் எல்லாம் வேண்டிய முறையானே வைத்தலானும் இவ்வாற் றான் எண்ணப்பட்டது எனக் கொள்க."- என்னும் உரைப் பகுதியிலும், ஐங்குறுநூறு குறிப்பிட்டுக் கூறப்பட்டிருப்பது காண்க. எனவே, பிறநூல்களில் உள்ள முறை வைப்புக்கு மாறாக, ஐங்குறு நூற்றில் மருதம், நெய்தல்,குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் திணைகள் முறைப்படுத்தப்பட்டி ருப்பது இயல்பே என உணரலாம். பிற நூல்களுக்கு மாறாக ஐங்குறுநூற்றில் திணைமுறை வைப்பு இருப்ப்து தவறில்லை. ஆனால், ஐங்குறுநூற்றில் மருதமும் நெய்தலும் முதலிலுல், குறிஞ்சி இடையிலும், பாலை யும் முல்லையும் இறுதியிலும் வைத்துத் தொகுக்கப் பெற்றது எவ்வாறு பொருந்தும்? இது பொருந்தும் இதற்கு விடையாகத் தக்க காரணம் கூறமுடியும்: ஐங்குறுநூற்றின் முதலில் உள்ள மருதப் பகுதியின் முதல் பத்து வேட்கைப் பத்து என்னும் பெயருடையது. இதிலுள்ள பத்துப் பாடல்களிலுமே, 'வாழியாதன் வாழி யவினி' என்னும் தொடரே முதல் அடியாக உள்ளது. எனவே, மருதப் பத்து வாழி என்னும் மங்கலச் சொல்லுடன் தொடங்கப்பட்டிருப்பது புலனாகும். இந்த மங்கலத்தொடக் கத்தால் மருதப் பகுதி ஐங்குறு நூற்றில் முதலிடம் பெற்றிருக் கலாம் - மற்றும்,-'வாழி ஆதன் வாழி அவினி' என்னும் தொட ரால் வாழ்த்தப்பட்டிருக்கும் 'ஆதன்' என்பவன் சேரமன்ன்ன்; . இந்த நூலைத் தொகுக்கச் செய்த யானைக்கட் சேய் மாந் தரஞ் சேரல் இரும்பொறையாரும் சேர மன்னர்; நூலைத் தொகுத்த கூடலூர்கிழாரும் சேரநாட்டுப் பகுதியைச் சேர்ந் தவர், எனவே, சேரமன்னன் ஒருவனது வாழ்த்துடன் தொடங் கும் மருதத் திணையை அவர்கள் முதலில் வைத்ததில் வியப் பில்லை. - இந்த முதல் அடியில், வாழி ஆதன் வாழி அவினி' என ஆதன், அவினி என்னும் இருவர் வாழ்த்தப்பட்டுள்ளனர். இந்த