பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 313 வேள்விசெய்து கொண்டு வந்திருப்பான்; பத்தாவது வேள்வி யின் போது பாலைக் கெளதமனார் இயற்கை எய்தி விட்டிருக் கிறார். இயற்கையாய் இது நடந்திருக்கலாம். வேள்விகள் என்னவோ, புலவரின் நன்மைக்காகச் செய்யப்பட்டுள்ளன - அவ்வளவுதான் மற்றப் பரிசுகளையும் நம்புவதற்குச் சான்றுகள் உள்ளன. பாலைக் கெளதமனார்க்காக வேள்வி செய்யப்பட்ட வரலாறு இன்றும் மலைநாட்டில் வழங்கப் படுகிறதாம். மற்றும், புறநானூற்றுப் பாடல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றிலும் சான்றுகள் கிடைத்துள்ளன. குமட்டுர்க் கண்ணனார், பரணர், காக்கை பாடினியார், நச்செள்ளையார் ஆகியோர் பரிசாகப் பெற்ற இடங்கள் கண்ணன் காடு, பரணன் கானம், காக்கையூர் என முறையே கல்வெட்டுக்களி லும் செப்பேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர் திரு. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் கூறியிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. கடவுள் வாழ்த்து எல்லாத்தொகைநூல்களிலும் கடவுள் வாழ்த்து இருந்தும் பதிற்றுப்பத்தில் இல்லாமைக்குக் காரணம், நூலின் முன் பகுதியாகிய முதற்பத்து கிடைக்கா தொழிந்தமையேயாகும். முதல் பத்துப் பாடல்களே கிடைக்காதபோது. அவற்றிற்கும் முன்னால் இருந்த கடவுள்வாழ்த்து எவ்வாறு கிடைத்திருக்க முடியும்? பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப்பாடல் பழைய ஒலைச் சுவடிகளில் இல்லாது போயினும். இக்காலத்தினர் அச்சிட்டு வெளியிட்டுள்ள பதிற்றுப் பத்துப் பதிப்புக்களில், எரி யெள்ளுவன்ன நிறத்தன்' என்று தொடங்கும் பன்னிரண்டடி கொண்ட பாடல் ஒன்று, கடவுள் வாழ்த்துப் பாடலாக நூலின் முன்னால் சேர்த்து அச்சிடப்பெற்றுள்ளது. இந்தப் பாடல், தொல்காப்பியம் - புறத்திணையியலில் 'அமரர் கண் முடியும் அறுவகை யானும் என்று தொடங்கும் (26 - ஆம்) நூற்பாவின் உரைப்பகுதியிடையே நச்சினார்க்கினியரால் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது. பாடல் முழுவதும் வருமாறு: 'எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியினர்க் கொன்றையம் பைந்தார் அகலத்தன் பொன்றார் எயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருட் காடமர்க் காடிய அடலன் நீடிப்