பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 தமிழ் நூல் தொகுப்புக் கலை "இழைபு என்னும் வனப்புக்கு இலக்கணம் கூறும் ஒற்றொடு புணர்ந்த” என்னும் செய்யுளியல் (242-ஆம்) நூற்பாவின்கீழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள, அவையாவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன வென் பது'-என்னும் உரைப்பகுதியாலும், அதே நூற்பாவின்கீழ் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள, "அவ்வாறு வருவன கலியும் ஆரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க் கத்தன என்றுணர்க'- என்னும் உரைப்பகுதியாலும் இதனை நன்கறியலாம். இது காறும்.இருநூல்களையும் பற்றிய பொதுச் செய்திகள் பேசப்பட்டன. இனி ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே காண்போம். - 23. நூற்றைம்பது கலித்தொகை எண்ணிக்கையும் ஆசிரியரும் கடவுள் வாழ்த்து உட்பட நூற்றைம்பது கலிப்பாக்களின் தொகுப்பு கலித்தொகையாகும். ஐங்குறு நூற்றைப் போலவே கலித்தொகையிலும் பாடல்கள் திணைவாரியாகத் தொகுக் கப் பட்டுள்ளன. முதல் பாடல் கடவுள் வாழ்த்து; முதலில் நிறுத் தப்பட்டுள்ள பாலைத்திணை முப்பத்தைந்து பாடல் கொண் டது; இரண்டாவதான குறிஞ்சி இருபத் தொன்பது; அடுத்த மருதம் முப்பத்தைந்து; நான்காவது முல்லை பதினேழு, இறுதி .யில் உள்ள தெய்தல் முப்பத்து மூன்று; ஆக மொத்தம் நூற். றைம்பது பாடல்கள் ஆகின்றன. இதனை, 'இறை வாழ்த்தொன் றேழைந்து பாலைநா லேழொன் றிறைகுறிஞ்சி யின்மருத மேழைங்-துறைமுல்லை ஈரெட்டொன் றாநெய்தல் எண்ணான்கொன் றைங்கலியாச் சேரெண்ணோ மூவைம்ப தே.” என்னும் பழம்பாட லொன்றால் அறியலாம். இவற்றுள் கடவுள் வாழ்த்துப் பாடியவர் நல்லந்துவனார் என்றுசொல்லப் படுகிறார். பாலைக் கலியைச் சேரமான் பாலை பாடிய பெருங்கோவும், குறிஞ்சிக் கலியைக் கபிலரும், மருதக்கலியை