பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றைம்பது கலித்தொகை 337 மருதனிள நாகனாரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லு ருத்திரனும், நெய்தல் கலியை நல்லந்துவனாரும் இயற்றியதாகச் சொல்கின்றனர். இந்தத் திணையமைப்பு முறைவைப்பின்ை нѣ, ஒவ்வொரு திணைக்கும் உரிய ஆசிரியர் இன்னின்னார். என்பதனையும், - . 'போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கமளி ஊடல் அணிமருதம்-கோக்கொன்றி இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் நேர்நெய்தல் புல்லும் கலிமுறை கோப்பு.” R 'பெருங் கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருத-மருஞ்சோழன் நல்லுருத் திரன் முல்லை நல்லந் துவனெய்தல் கல்விவலார் கண்ட கலி." என்னும் பழம்பாடல்கள் அறிவிக்கின்றன. தொகுத்தவர் இந்நூலைத் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. தொகுத்தவர் நல்லந்துவனார். கலித்தொகை நூல் முழு மைக்கும் நச்சினார்க்கினியர் உரையெழுதியுள்ளார். அவர் தமது உரையின் முகப்பிலும் இறுதியிலும் கலித்தொகையை நல்லந்துவனார் கோத்ததாக - தொகுத்ததாகக் கூறியுள்ளார். முதலில், முகப்பிலுள்ள உரைப்பகுதி வருமாறு: "...ஆதலான் ஈண்டுப் பாலைத் திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தாரென்று கூறுக.” இனி உரையின் இறுதிப் பகுதி வருமாறு: "இத் தொகையைப் பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் என இம்முறையே கோத்தார் நல்லந்துவனார்” இந்த உரைப் பகுதிகளால், கலித்தொகை தொகுத்தவர் நல்லந்துவனார் என்பது விளங்கும். இன்னும் இதனை, " நாடும் பொருள் சான்ற நல்லந் துவனாசான் சூடுபிறைச் சொக்கன் துணைப்புலவோர் - தேடுவார் கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலியினையே கூட்டினான் ஞாலத்தோர்க்கு.'