பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் பழம் பாடலாலும் அறியலாம். எத்தனை ஆசிரியர்கள்? - கலித்தொகையின் ஆசிரியர்கள் ஐவர் என மேலே கூறப் பட்டுள்ளது. ஆனால், சி.வை. தாமோதரம் பிள்ளை, கே.என் சிவராசப் பிள்ளை, எஸ்.வையாபுரிப் பிள்ளை, வே. வெங்கட ராசுலு ரெட்டியார் முதலிய தமிழறிஞர்கள் கலித்தொகை யைப் பாடியவர் ஒருவரே எனக் கூறியுள்ளனர். ஐவர் பாடிய தாகக் கூறும் வெண்பா எந்தக் கலித்தொகை ஒலைச் சுவடி பிலும் இல்லையாதலின், அது பிற்காலத்தார் ஒருவரின் கற்பனைச் சரக்கு என்பது இவர்களின் கொள்கை. இயற்றியவர் ஐவர் அல்லர்-ஒருவரே என்பதற்கு இவர்கள் கூறும் காரணங் கள் வருமாறு:- - 'பாலைக் கலியைப் பாலை பாடிய பெருங்கடுங்கோவும் குறிஞ்சிக் கலியைக் கபிலரும் பாடினர் என்பது ஓரளவு பொருந்தும், இவர்கள் மற்றத் தொகைநூல்களிலும் முறையே பாலை பற்றியும் குறிஞ்சி பற்றியும் நிரம்பப் பாடியுள்ளனர் ஆதலின், ஆனால், மருதனிள நாகனார் வேறு தொகை நூல் களில் மருதத்தைப் பற்றி நிரம்பப் பாடியிருக்கவில்லை யாதலின், அவர் மருதக் கலியைப் பாடியிருக்க முடியாது. சோழன் நல்லுருத்திரன் புறநானூற்றில் ஒரு செய்யுளே பாடியுள்ளார். ஆதலின், அவர் முல்லைக் கலியைப் பாடி யிருக்க முடியாது. நல்லந்துவனார் வேறு நூல்களில் நெய்தல் திணையைப் பற்றி ஒரு பாடலும் பாடவில்லை யாதலின் அவர் நெய்தல்கலியைப் பாடியிருக்க முடியாது."* மேலேயுள்ளவாறு அறிஞர்கள் கூறி, கலித்தொகையை ஐவர் இயற்றவில்லை - ஒருவரே இயற்றினார் - என்று கூறு கின்றனர். இது பொருந்தாது. பாலைக்கலியைப் பெருங்கடுங் கோவும் குறிஞ்சியைக் கபிலரும் பாடினர் என்பது பொருந்தும் போது, கலித்தொகை முழுவதையும் ஒருவரே இயற்றினார் என்பது எவ்வாறு பொருந்தும்? அடுத்து, - மருதனிள நாக னார் மற்ற நூல்களில் மருதம் பற்றி நிரம்பப் பாடவில்லை யாதலின், இவர் மருதக்கலியைப் பாடியிருக்க முடியாது என் கின்றனர். மற்ற நூல்களில் மிகுதியாகப் பாடாமற் போனால்