பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றைம்பது கலித்தொகை 339 என்ன? கலித்தொகையில் மருதம்பற்றி முப்பத்தைந்து பாடல் கள் பாடியுள்ளாராதலின், இவர் மருதனிள நாகனார் எனத் திணைப் பெயரால் அடைமொழி தந்து வழங்கப்படுகிறார் எனக் கூறலாமல்லவா! இவ்வாறே, நல்லுருத்திரனும் நல்லந் துவனாரும் வேறு நூல்களில் முறையே முல்லை பற்றியும் நெய்தல் பற்றியும் பாடாமற் போனாலென்ன?மற்றத் தொகை நூல்கள் ஆசிரியத்தாலானவை. இவர்கள் கலிப்பாப் பாடுவதில் வல்லமையும் ஆர்வமும் உடையவரா யிருக்கலாம்; அதனால் இத்திணைகள் பற்றிக் கலிப்பாவால் பாடியிருக்கலாம். இவர்கள் ஆசிரியப்பாவாலும் இத்திணைகள்பற்றிப் பாடியிருக்கலாம்; அவை கிடைக்காமற் போயிருக்கலாம். அல்லது,-மற்றத் தொகை நூல்களில் எண்ணிக்கை சரியாய் போய்விட்டதால், இவர்கள் பாடல் இடம்பெறாமல் போயிருக்கலாம். எனவே, மற்ற நூல்களில் இவர்கள் இத்திணைகளைப் பற்றிப் பாடி யிருக்கவில்லை யென்பதனால், கலித்தொகையிலும் இவர்கள் இத்திணைகள் பற்றிப் பாடியிருக்க முடியாது எனக் கூறுதல் பொருந்தாது. முன்பு, ஐங்குறுநூறு என்னும் தனித் தலைப்பில் திணை வாரியாகப் புலவர் ஐவரையும் பற்றிக் கூறியுள்ள ஆய்வுரையை ஈண்டு நினைவுகூர்தல் நல்லது. - இவ்வாறே இன்னும் என்னன்னவோ பொருந்தாக் காரணங் கள் கூறிக் கலித்தொகையை ஒருவரே இயற்றினார் என அவர் கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ள மற்றக் காரணங், களை எளிதில் மறுத்துவிடலாம். மற்ற ஏழு தொகை நூல் களும் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாயிருக் கும் போது, கலித்தொகைமட்டும் ஒருவர் இயற்றியதாக இருக்க முடியாது. எனவே, அவர்தம் கூற்றை விடுப்போம். இது சார்பாக இன்னொரு கொள்கையும் ஒருவரால் கூறப் படுகிறது. கலித்தொகையை இயற்றியவர் ஒருவரும் அல்லர் -ஐவரும் அல்லர்-ஐவருக்கும் மேற்பட்ட பலர்-என்பது இவர் தம் கொள்கை. இதற்கு இவர்கள் கூறும் காரணங்களாவன:(1) குறிப்பிட்ட ஒருதிணைக் கலிக்குள்ளேயே சொன்ன கருத்துக்களே திரும்பத்திரும்பக் கூறப்பட்டுள்ளன.