பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபது பரிபாடல் 349 இசையமைத்து உதவுமாறு இசையாசிரியர்களை அணுகிக் கேட்டு அமைத்து வைத்துச் சென்றிருப்பாரா? அல்லது. இசை யாசிரியர்கள் தமக்குக் கிடைத்த பாடல்களுக்குத் தாமாக இசையமைத்துப் பாடிப்பார்த்து மகிழ்ந்திருப்பார்களா? அல்லது, பரிபாடலைத் தொகுத்தவர், ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைத்துத் தருமாறு இசையாசிரியச் பலரை யணுகிக் கேட்டு இசையமைக்கச் செய்து நூலைத் தொகுத்திருப்பாரா? மேற் கூறிய எல்லா வகையிலும் இசையமைக்கப்பட்டிருக் கலாம். எழுபது பாடல்களுள் சிலவற்றிற்குப் பாட லாசிரியர்களே இசையமைத்திருக்கலாம். சிலவற்றிற்குப் பாட லாசிரியர்கள் இசையாசிரியர்களை யணுகிக்கேட்டு இசை யமைக்கச் செய்திருக்கலாம். சிலவற்றிற்கு இசையாசிரியர்கள் தாமாகவேஇசையமைத்துப் பாடியிருக்கலாம். இவ்வாறு இசை யமைத்துப் பாடப்பட்டு நாடுமுழுதும் பரவியிருந்த பாடல் களை ஒருவர் தொகுத்து ஒரு தொகைநூலாக்கி யிருக்கலாம். இசையமைக்கப் படாதிருந்திருக்கக் கூடிய சில பாடல்களுக்கு இசையமைக்கச் செய்யும் பொறுப்பைத் தொகுப்பாசிரியரும் எடுத்துக் கொண்டிருக்கலாம் இந்தக் காலத்தில் தமிழிசைப் பாடல்தொகுப்பு நூல்கள், மேலே கூறப் பட்டுள்ள எல்லாவகை யிலும் இசையமைக்கப் பட்டுள்ளமை ஈண்டு ஒப்புநோக்கற் பாலது. கண்டெடுத்த பாடல்கள்: கிடைத்திருக்கும் பரிபாடல் நூலின் இருபத்திரண்டு பாடல் களும் முதல் பாட்டு தொல்காப்பிய - இளம்பூரணர் உரையி னால் அறியப்பட்டுச் சேர்க்கப்பட்டது என்னும் செய்தி முன் னரே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருபத்திர்ண்டு பாடல்கள் அல்லாமல், மேற்கொண்டு இரண்டு முழுப்பாடல்களும் பதி னொரு குறைப்பாடல்களும் பல்வேறு நூல்களிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன-ஏன் - கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றே கூறலாம். இவைபற்றிய விவரம் வருமாறு: (1) தொல்காப்பியம்-செய்யுளியலில் பரிபாடலுக்கு இலக் கணம் கூறும் கொச்சகம் அராகம்’ என்னும் (121-ஆம்) நூற் பாவின் உரையிடையே, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்