பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபது பரிபாடல் 351 ளார். இவ்வாறே நச்சினார்க்கினியரும் வரைந்துள்ளார். இது ஒரு கடவுளைப் பற்றிய பரிபாடல் பகுதியாக இருக்கலாம். (5) நம்பியகப் பொருளில் உள்ள அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தலும் என்னும் (129-ஆம்) நூற்பாவின் உரையிடையே, பழைய உரையாசிரியர் எழுதியுள்ள, 'அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்ததற்கு விதி யாதோ வெனின், முன்புற் றறியா முதற்புணர்ச்சி மொய்குழலை யின்புற்றணிந்த வியலணியும்-வன்பணியு நாணேனும் தொல்லை யணியென்ன நன்னுதலை ...ணந்து' என்னும் பரிபாட்டிலுட் செய்யுளாம் எனக் கொள்க.” என்னும் உரைப்பகுதியால், பரிபாடல் பாடல்ஒன்றின் ஒரு பகுதி தெரிய வருகிறது. இது வையை பற்றியதாயிருக்க லாமோ? (6-11).புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலிலி ருந்து பரிபாடல் நூலின் ஆறு பாடல்களின் பகுதிகள் அறியப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாடல் பகுதியின் கீழும் புறத்திரட்டு என எழுதப்பட்டுள்ளது. இந்த ஆறு பாடல் பகுதிகளும் புறத் திரட்டு நூலில் 866, 874, 875, 876, 877, 878 என முறையே வரிசை எண்கள் தரப்பட்டுள்ளன. இந்த ஆறு பாடல் பகுதி களின் முதற் குறிப்புக்கள் வருமாறு:- - 'உலகம் ஒரு கிறையா (4 அடிகள்) "மாயோன் கொப்பூழ்" (11 அடிகள்) 'தண்டமிழ் வேலி (4 அடிகள்) செய்யாட் கிழைத்த (4 அடிகள்) கார்த்திகை காதில் (4 அடிகள்) "ஈவாரைக் கொண்டாடி (4 அடிகள்) இந்த ஆறு பாடல்களும் மதுரையைப் பற்றியன வாகும். (12) தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியலில் செல்வம் புலனே' என்னும் (11 - ஆம்) நூற்பா உரையின் இறுதியில், "வையை வருபுனல் ஆடல் இனிதுகொல் செவ்வேற்கோ குன்ற நுகர்தல் இனிது கொல்