பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 தமிழ் நூல் தொகுப்புக் கலை வைவ்வேல் துதியன்ன கண்ணார் துணையாக எவ்வாறு செய்வாங்கொல் யாமென நாளும் வழிமயக் குற்று மருடல் நெடியான் நெடுமாடக் கூடற் கியல்பு' என்னும் பாடல் பகுதி இளம்பூரணரால் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. இது பரிபாடல் நூற்பாடல் ஒன்றின் பகுதியாக இருக்கலாம் என அறிஞர் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அங்ங்னமாயின், இதனை மதுரை பற்றிய பாடலாகக் கொள் GT GI)fT Lð. (13) இருமை வகை தெரிந்து என்னும் (23-ஆம்) திருக் குறளின் உரையில், "தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் என்புழிப்போல, இருமைஎன்றது ஈண்டுஎண்ணின் கண் நின்றது”-எனப் பரிமேலழகர் ஒரு பாடலை எடுத்துக் காட்டியுள்ளார். இங்கே காட்டப்பட்டுள்ள, "தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன் பரிமா கிரையின் பரந்தன்று வையை' g என்னும் பாடல் பகுதி, பரிபாடல்நூற் பாடலொன்றின் பகுதி என்பதாகத் திருக்குறள் பரிமேலழகர் உரை - நுண்பொருள் மாலை என்னும் நூலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் பாடல் வையை பற்றியதாகத் தோன்றுகிறது. இவ்வாறாக, இழக்கப்பட்ட பரிபாடல் பாக்களுள் இரு முழுப் பாக்களும் பதினொரு பாடற்பகுதிகளும் பிற நூல் களின் வாயிலாக அறியப்படுகின்றன. எழுபது பரிபாடல்களும் என்று எங்கே எவ்வாறு கிடைக்குமோ முதல் பத்தும் இறுதிப் பத்தும் இல்லாத பதிற்றுப்பத்து நூலின் ஒலைச்சுவடி ஒன்றே ஒன்று கிடைத்தது போலவே, இருபத்திரண்டாவது பாடல் வரை மட்டுமே உள்ள பரிபாடல் ஒலைச்சுவடி ஒன்றே ஒன்று தப்பித் தவறி கிடைத்திருக்க, அதைக்கொண்டு அதேபோல் பல படிகள் எடுக்கப்பட்டுப் படிக் கப்பட்டிருக்க வேண்டும். இந்த எழுபது பரிபாடல்களே யல்லாமல், இன்னும்பல பரிபாடல்கள் காலந்தோறும் எழுதப்பட்டு வந்துள்ளன.