பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

தமிழ் நூல் தொகுப்புக் கலை

ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம்
திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலின்
சிற்றறி வினர்க்கும் தெற்றெனத் தோன்ற
மதியின் நகைப்பு விதியுளி யகற்றி
எல்லையில் சிறப்பின் தொல்லோர் பாடிய
அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்
சுருங்கிய உரையின் விளங்கக் காட்டினன்
நீணிலங் கடந்தோன் தாள்தொழு மரபின்
பரிமே லழகன் உரிமையின் உணர்ந்தே.”

இந்தப் பாடலில் பரிமேலழகரின் உரைச் சிறப்பினும், அந்த நாளில் பரிபாடல் பெற்றிருத்த ஆட்சியும் மாட்சியுமே மிகவும் புலப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மாற்றங்களால் சிலகாலம் பரிபாடல் ஆட்சியிழந்திருந்தது குறித்துக் கலைமகளே வருந்தியிருந்ததாகவும், பலர் பரிபாடலைத் தவறுதலாக எழுதியதையும் பாராட்டியதையும் அறிந்த பெரியோர் வருந்தியதாகவும், இந்தக் குறை பரிமேலழகரின் முயற்சியால் நீங்கியதாகவும் இப்பாயிரப் பாடல் அறிவிக்கிறது. இதனால், அந்நாளில் பரிபாடல் பெற்றிருந்த பரந்து பட்ட ஆட்சியும் மாட்சியும் நனிவிளங்கும் உரையாசிரியர்கள் இந் நூற் பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்டு போற்றியுள்ளனர்.

இதுகாறும் பதினெண் மேற்கணக்கு நூல்களைப்பற்றி ஆராய்ந்தோம். இனிப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை நோக்கிச் செல்வோம்.

25. பதினெண் கீழ்க்கணக்கு

தொகைப் பெயர்

பத்துப் பாட்டு, எட்டுத் தொகை ஆகிய பதினெட்டு நூல்களையும் சேர்த்துப் பதினெண் மேற் கணக்கு’ என வழங்குவதாக முன்பு கூறினோம். அவ்வாறே, வேறு பதினெட்டு நூல்களைச் சேர்த்துப் பதினெண் கீழ்க் கணக்கு என்று சொல்லும்