பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க்கணக்கு 357 வந்த பனுவல் இலக்கணத்தானும் அடிநிமிர்வின்றாய் வருவது தான் அம்மை எனப்படும். அடிநிமிரா தென்றது ஆறடியின் ஏறாமையை சிலவாதல் சொல் லெண்ணுச் சுருங்குதல். மெல்லிய வாதல் சிலவாகிய சொற்களும் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தான் வருதல். தாய பனுவலின் என்பது, அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணம் கூறுவன போன்றும் இடையிடையே அன்றாயும் தாவிச்செல்வ தென்றவாறு. அங்ங்ணம் வந்தது பதினெண் கீழ்க் கணக்கு. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியா னும் சிறுபான்மை ஆறடியானும் ஒரோ செய்யுள் வந்தவாறும் அவை சின் மென் மொழியாய் வந்தவாறும், அறம் பொருள் இன்பத் திலக்கணம் கூறிய பாட்டுக்களும் பயின்று வந்தவாறும், இடையிடையே கார்நாற்பதும் களவழி நாற்பதும் முதலியன வந்தவாறுங் காண்க. உள்ளுறுப்பாய்ப் பதினெட்டையும் (பதி னெண் கீழ்க்கணக்கு நூல்களையும்) வனப்பு எனப்படும் என்றுங் கொள்க. பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.’ (குறள்-675) இஃது இலக்கணம் கூறலின் பனுவலின்’ என்றார். 'மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள் கண் பலர்காணும் பூவொக்கு மென்று' (குறள்-11.12) இஃது இலக்கிய மாதவின் 'தாய' என்றார். ஆசாரக் கோவை யுள் "ஆரெயின் மூன்றும்’ ஆறடிமீாம் சிறுபான்மை வந்தது. இது நச்சினார்க்கினியர் உரைப்பகுதி. இனி இளம் பூரணரின் உரை வருமாறு: 'சிலவாய் மெல்லியவாகிய மொழியினானே தொகுக்கப் பட்ட அடிநிமிர்வில்லாத செய்யுள் அம்மையாம் என்றவாறு உதாரணம்: 'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போல் போற்றாக் கடை" (குறள்-315) என வரும்'.- .." -