பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 தமிழ்நூல் தொகுப்புக் கலை இருப்பதனால்தான், கீழே குறிப்பதைக் கீழ்க்குறிப்பு என்கி றோம். மற்றும், சிறுகுறிப்பு, பெருங்குறிப்பு என்னும் பொருள. மைந்த வழக்காறுகளைப் பெரியோர் பாடல்களிலும் காண லாம். திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ள. 'தொழுது தூமலர் தூவித் துதித்து கின்று அழுது காமுற் றரற்றுகின் றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதும் கீழ்க் கணக்கு இன்னம்பர் ஈசனே.” என்னும் பாடலில், ஒவ்வொரு வரையும் பற்றி எழுதிவைக்கப் படும் சிறு குறிப்பு கீழ்க்கணகெனக் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க. இதற்கு நேர் எதிராக, பட்டினத்தாரின் கோயில் நான்மணி மாலை' என்னும் நூலில் நெடுங்குறிப்பு ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை. 'ஒருபதி னாயிரம் திருநெடு நாமமும் உரிம்ையிற் பாடித் திருமணப் பந்தருள் அமரர் முன்புகுந்து அறுகு சாத்திகின் தமர்பெயர் எழுதிய வரிகெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன்" என்னும் (4-ஆம்) பாடல் பகுதியால் அறியலாம். இப் பாடல் பகுதியில் உள்ள வரிநெடும் புத்தகம் என்னும் வழக் காற்றினைக் காண்க. இதுகாறும் கூறியவற்றால், கீழ்கணக்கு என்பதில் கணக்கு என்பது நூல் எனப் பொருள்படும் எனவும், கீழ்' என்னும் அடைமொழி தகுதிபற்றியதன்று. அளவுபற்றியதாகும் எனவும் நன்கு தெளியலாம். தொகைப் பெயர் வழக்காறு: அம்மை என்னும் வனப்பு பற்றிய தொல்காப்பிய நூற். பாவின் உரைகளில், பதினெண் கீழ்கணக்கு சுட்டப்பட்டிருப்பது முன்பு காட்டப்பட்டது. இன்னும், தொல்காப்பிய உரை களிலும், நம்பியகப் பொருள், நன்னூல், யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றின் உரைகளிலும் இன்ன பிறவற்றி லும், கீழ்க்கணக்கு-பதினெண் கீழ்க்கணக்கு என்னும் பெயர்