பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க்கணக்கு 361 வழக்காறு உள்ளமையைக் காணலாம். அவற்றுள் சில வரு மாறு;- தொல்காப்பியம் செய்யுளியலில் உள்ள, நெடுவெண் பாட்டே முக்கா லடித்தே குறுவெண் பாட்டிற்கு அளவெழு சீரே' என்னும் (158 - ஆம்) நூற்பாவின்கீழ்ப் பேராசிரியர் வரைந் துள்ள. “...இங்ஙனம் அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாதல் நோக்கிப் பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளா யிரத்துள்ளும் ஆறடியின் ஏறாமற் செய்யுள் செய்தார் பிற சான்றோரும் எனக் கொள்க’ என்னும் உரைப்பகுதியிலும், அதே நூற்பாவின் கீழ் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள, “...இக் கருத்தானே கீழ்க்கணக்கில் நான்கடியும் ஈரடியுமே மிக வந்தவாறுங் காண்க’ என்னும் உரைப்பகுதியிலும் இவ்வழக்காறு வந்துள்ளமை காணலாம். மற்றும், தொல்காப்பியம் - அகத்திணையியலில் மாயோன் மேய' என்னும் (5-ஆம்) நூற்பாவின்கீழ், 'அது தொகைகளினும் கீழ்க்கணக்குகளினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க' எனவும், நாடக வழக்கினும்’ என்னும் (53-ஆம்) நூற்பாவின்கீழ், “ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புறம் என்னும் இரண்டிற்கும் பொதுவாய் வருமாறு நெடுந்தொகையும் புறமும் கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பனவற்றுட் காண்க' - எனவும், புறத் திணையலில் அமரர்கண் முடியும் என்னும் (26-ஆம்) நூற்பா வின்கீழ், 'தொகைகளிலும் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக'-எனவும், செய்யுளியலில் 'தரவின்றாகி என்னும் (149 ஆம்) நூற்பாவின் கீழ், "...ஆசிரிய மும் வெண்பாவும் ஒரு பொருள்மேல் பல...... வருதலும் பிற வாறாய் வருதலும் வரையறை யிலவாயின. அவை ஐங்குறு நூறு, முத்தொள்ளாயிரம், கீழ்க்கணக்கு முதலியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் காண்க - எனவும், நச்சினார்க்கினியர் வரைந் துள்ள உரைப் பகுதிகளில் பதினெட்டு நூல்கட்கும் பொதுத்