பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 தமிழ்நூல் தொகுப்புக் கலை = ஏலாதி என்னும் நூல். ஆக இதுவரை பதினேழு கணக்காகி யுள்ளன. பதினெட்டாவதாக இன்னிலையை யாவது கைந் நிலையையாவது கொள்ள வேண்டும். - இன்னிலையைக் கழித்துக் கட்டுபவர்கள், ‘இன்னிலைய காஞ்சி, என்பதற்கு, இனிய இயல்பையுடைய முதுமொழிக் காஞ்சி, எனப் பொருள் கூறுகின்றனர்; சிலர் மெய்ந்நிலைய காஞ்சி எனப் பாடம் கொண்டு, இன்னிலையை ஒழித்துக் கட்டுகின்றனர். இன்னிலையையும் ஒரு நூலாகக் கொள்ப வர்கள் இன்னிலை சொல் காஞ்சி' எனப் பாடங் கொண் டுள்ளனர். கைந்நிலையை விலக்குபவர்கள், என்டவே கைந் நிலைய வாங் கீழ்க் கணக்கு’ எனப் பாடங்கொண்டு, சிறிய அளவான கீழ்க்கணக்கு நூல்கள் நாலடியார் முதல் ஏலாதி வன்ரயும் என்று கூறுவர் எனப் பொருள் கூறுகின்றனர். 'கைந்நிலைய' என்றால் சிறிய அளவான என்று பொருளாம். இவர்கள் இன்னிலையை ஒரு நூலாகக் கொண்டு விட்டதால் பாடலின் மூன்றாம் அடியின் இறுதியில் என்பவே என்று இருப்பதைத் தமக்குச் சான்றாகக் கொண்டு, முதல் மூன்று அடிகளிலுமே பதினெட்டு நூல்களும் சொல்லி முடிக்கப்பட்டு விட்டதாக நம்புகின்றன்ர். இறுதியடியை, நன்னிலையதாகும் கணக்கு’ எனப் பாடம் ஒதுவாரும் உளர். உயர்திரு. ரா. இராகவையங்கார், நூல் நாற்பதைந் திணை' என்பதில் நூல் என்பதை ஐந்திணை என்பதோடு கூட்டாமல், ஐந்திணை என்றால் ஐந்து நூல்கள் - அஃதாவது திணை பற்றிக்கூறும் ஐந்துநூல்களே ஐந்திணை எனப்பட்டன. என்று கொண்டு, முன்பு கூறிய திணை நூல்கள் நான்குடன் கைந்நிலை என்பதையும் சேர்த்து, ஐந்திணை அஃதாவது ஐந்திணை நூல்கள் எனப் பொருள் கூறியுள்ளார். இவர் இறுதியடியை 'தன்னிலைய தாகுங் கணக்கு' எனப் பாடங் கொண்டுள்ளார். இது வலிந்து கொள்ளும் பொருளாகும். இன்னிலையை விலக்கிக் கைந்நிலையைக் கொள்ளும் உயர்திரு வை. அனந்தராமையர்.