பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க்கணக்கு - 367 பொருளில் 'கைந் நிலையவாம்' என்னும் அடைமொழி உள்ளது கைந்நிலை சிறுநிலை; எனவே, பதினெண் கீழ்க்கணக்கை அறி முகப்படுத்தும் பாடல் பின்வருமாறு இருக்கவேண்டும்: 'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை முப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலை காஞ்சியோ டேலாதிய யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு. ' - ஏறக்குறைய இது சரியான பாடமாயிருக்கலாம். இன்னிலை” என்பதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். இன்னிலைய, என்று பாடங் கொள்ளின், அது கர்ஞ்சிக்கு அடைமொழியாகி இனிய இயல்புடைய காஞ்சி எனப் பொருளாகி கூடும்; எனவே அங்ங்னம் கொள்ளலாகர்து. எதற்கும் அடைமொழி யில்லாத போது காஞ்சிக்கு மட்டும் அடைமொழி ஏன்? பதினெட்டு நூல்களையும் அடக்குவதற்கு இடம் நெருக்கடியாயிருக்கும் போது, தேவையில்லாமல் இன்னிலைய என்ற அடை மொழியைப் போடவேண்டிய தில்லை. ஆனால், நான்காம் அடியில், கீழ்க்கணக்கு என்றால் என்ன என்று உணர்த்துவதற் காக, கைந்நிலையவாம்’ என்னும் அடைமொழியிருக்கலாம் எனவே, இந்தப் பழைய வெண்பாவின்படி நோக்கின், பதி னெண் கீழ்க்கணக்கில் இன்னிலை என்னும் நூல் இடம் பெறவே இயற்கையான வாய்ப்பு உள்ளது. கைந்நிலை என்ற பெயரிலும் ஒருநல்ல நூல் உண்டு. அது பற்றி நமக்குக் கவலை யில்லை. இந்தப் பாடலின்படி பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்தது இன்னிலையே யாகும். அறிஞர்கள் இதனை மேலும் ஆய்ந்து உண்மை முடிபு காண்பார்களாக வரிசை முறை: பழைய வெண்பாவில் நாலடியார் முதலிடத்தையும் ஏலாதி இறுதியிடத்தையும் பெற்றுள்ளது. திருக்குறள் இடை யில் உள்ளது. இந்த வரிசை முறையே சரியானது என்று கூற முடியாது. வெண்பாவை எதுகை மோனையுடன் தளை தவறா மல் யாப்பதற்காகவே இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, உண்மையான வரிசை முறை இன்னதுதான் என்று கூறுவதற்கில்லை. ஆயினும், தகுதி, தரம், பொருள், அளவு