பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க்கணக்கு 369 பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவு உடையது; உலகப் பொதுமறை யெனப் புகழப்படுவது; ஏறக்குறைய இருநூறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றிருப்பது. 2. நாலடியார்: நானூறு வெண்பாக்கள் கொண்டது; நாலடி நானூறு என்றும் வழங்கப்படுவது; திருக்குறள் போலவே அறம், பொருள், காமம் என்னும் மூன்று பிரிவு உடையது; சமண முனிவர்கள் பலர் பாடிய' பாடல்களின் தொகுப்பு எனப்படுகிறது. இதனை நக்கீரர் பாடியதாக இப்போது ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது. 3. பழமொழி: நானூறு வெண்பாக்கள் கொண்டது; முன்றுறை யாரையனாரால் இயற்றப்பட்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமைந்திருப்பது. 4. திரிகடுகம்: ஆசிரியர் நல்லாதனார். உடலுக்கு நன்மை பயக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று காரச் சரக்குகளால் ஆன திரிகடுகம் என்னும் மருந்தே போன்று, உயிர்க்கு நன்மை பயக்கும் மும்மூன்று நற்கருத்துக் களைக் கொண்ட நூறு வெண்பாக்களை உடையது. கடவுள் வாழ்த்து தனியே உள்ளது. 5. நான்மணிக்கடிகை: ஆசிரியர் விளம்பிநாகனார். நான்கு மணிகள் கொண்ட அணிகலன் போன்று, நந்நான்கு நல்ல கருத்துக்களைக் கொண்ட (கடவுள் வாழ்த்து உட்பட) நூற்றாறு வெண்பாக்களை உடையது. - 6. சிறுபஞ்ச மூலம்: ஆசிரியர் காரியாசான். பஞ்ச மூலம் என்றால் ஐந்து வேர்கள் என்பது பொருள். உடலுக்கு நன்மை செய்யும் கண்டங்கத்தரிவேர், சிறு வழுதுணைவேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், பெருமல்லி வேர் ஆகிய ஐந்தாலான மருந்தைப் போல, உயிருக்கு நன்மை தரும் அவ்வைந்து நல்ல கருத்துக்களைக் கூறும் (கடவுள் வாழ்த்து உட்பட) தொண்ணுற்றேழு வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். 7. ஏலாதி: ஆசிரியர் கணிமேதையார். ஏலம், இலவங்கம், சிறு நாவல் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு சரக்கு