பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 தமிழ் நூல் தொகுப்புக் கலை கள் கொண்ட மருந்து போன்று, ஆறுஆறு நற்கருத்துகள் கூறும் நூறுபாக்கள் கொண்டது. பாயிரப்பாக்கள் தனியே இரண்டு உள்ளன. 8. முதுமொழிக் காஞ்சி: மதுரைக் கூடலூர் கிழார் இயற்றியது. காஞ்சி யென்பது உயர்ந்த மெய்யுணர்வுக் கருத்தைக் கூறுவது. ஒவ்வொன்றும் முதுமொழியாயிருத் தலின் முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது. இந்நூல் பத்துப் பத்துக்களை உடையது. ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகள் உள்ளன. 9. ஆசாரக் கோவை: ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். நீதி நல்லொழுக்கத்தின் தொகுப்பாதலின் ஆசாரக்கோவை எனப்பட்டது. நூறு வெண்பாக்கள் கொண்டது. இந்நூலில் பல வகை வெண்பாக்கள் உள்ளன. ஐந்தடிப் பாடல்களும் இதில் Զ-6IT : 10. ஐந்திணை ஐம்பது: ஆசிரியர் மாறன் பொறையனார் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்திணை, பற்றிப் பத்துப்பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் கொண்ட அகப்பொருள் நூல் இது. 11. ஐந்திணை எழுபது: மூவாதியார் இயற்றியது. திணைக்குப் பதினான்கு பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் எழு பது பாடல்கள் கொண்டது. இறுதியில் நெய்தல் திணைக்கு உரிய இரு பாடல்கள் காணப்படவில்லை. 12. தினமொழி ஐம்பது ஆசிரியர் கண்ணன் சேந்தனார். திணைக்குப் பத்துப் பாடல்கள் வீதம் ஐந்திணைகளுக்கும் ஐம்பது பாடல்கள் கொண்ட நூல் இது. - 13. திணைமாலை நூற்றைம்பது: கணி மேதாவியார் இயற்றியது. திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் ஐந்திணைக் கும் நூற்றைம்பது பாடல்கள் இருப்பதோடு, குறிஞ்சி நெய்தல், முல்லை ஆகிய மூன்றிலும் ஒவ்வொரு பாடல் கூடுத லாக இருப்பதால், இந் நூலில் மொத்தம் நூற்றைம்பத்து மூன்று பாடல்கள் உள்ளன. - 14. கார் நாற்பது: ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனார். பிரிந்து சென்ற தலைவனின் கார்காலத்து