பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலடியார் 375 ஒலைச் சுவடி நூலக நிறுவனத்தால் (Government Oriental Manuscritps Library, Madras)1960 - Qā Qaissol-Gullósitor பதிப்பில், நக்கீரர்' என்னும் பெயரின்றி, - 'இன்னவை பிறவும் நாலடி நானூற்றில் வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை, பிறவும் அன்ன. என்றே உள்ளது. எனவே, சுவடிக்குச் சுவடி பாட வேறு பாடு உள்ளமை புலப்படலாம். யாப்பிலக்கணம் பற்றி வெண் பாவால் இயற்றப் பெற்ற நக்கீரர் நாலடி நாற்பது என்னும் நூல் ஒன்று யாப்பருங்கல விருத்தியுரையால் நன்கு அறியப் பட்டுள்ளது. அந்த நினைவை வைத்துக்கொண்டு, சுவடி பெயர்த்து எழுதியவர், நாலடி நானுாறு என்பதையும் நக்கீரர் நாலடி நானூறு, என எழுதி விட்டிருப்பாரா? ஒருவேளை சமண முனிவர் எழுதிய நாலடியாரினும் வேறானதாய், நக்கீர ரால் 'நாலடி நானூறு' என்னும் பெயரில் வேறொரு நூல் எழுதப்பட்டிருக்கக் கூடுமா? சிலர் இவ்வாறு கூறியுமுள்ளனர். அஃதாவது,-நானூறு வெண்பாக்களால் நக்கீரர் யாப்பிலக்கண நூலொன்று இயற்றியுள்ளார்-என்று கூறுகின்றனர். இஃது உண்மையாயிருக்க முடியுமா? நாலடி நாற்பது; என்னும் பெய ரில் நாற்பது வெண்பாக்களால் நக்கீரர் இயற்றியுள்ள யாப்பிலக்கண நூலை, 'நாலடி நானுாறு எனத் திரிபாக உணர்ந்துகொண்டு இவ்வாறு கூறுகின்றனரா?மேலும், நக்கீரர் அடிநூல்' என்னும் பெயரில் யாப்பிலக்கண நூல் ஒன்று இருப்ப தாகத் தொல்காப்பிய உரைகளிலிருந்து அறியப்படுகிறது; இந் நூலைச் சேர்ந்த ஐஞ்சீரடுக்கலும் என்னும் நூற்பா தொல் காப்பிய உரைகளில் எடுத்தாளப் பட்டுள்ளது-என்னும் செய்தி யும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது. . மற்றும், நக்கீரர் ஒருவரா பலரா என்ற சிக்கலும் ஈண்டு எழுகிறது. எட்டுத் தொகை, பத்துப் பாட்டில் பாடல்கள் இயற்றியுள்ள நக்கீரரும், நாலடியார் இயற்றியதாகக் கூறப் படும் நக்கீரரும், நாலடி நாற்பது என்னும் யாப்பிலக்கண நூல் எழுதியதாகக் கூறப்படும் நக்கீரரும், நாலடி நானூறு என்னும் யாப்பிலக்கண நூல் எழுதியதாகச் சொல்லப்படும்